சுடச் சுடச் செய்திகள்

தங்கத்தைப் பதுக்கியோருக்கு பொதுமன்னிப்பு: புதிய யோசனை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் தங்­கத்­துக்­கான தேவை எப்­போ­துமே அதி­க­மா­கவே இருக்­கும். பொது­மக்­க­ளின் ஆர்­வம் ஒரு­பக்­கம் இருந்­தா­லும் வரி ஏய்ப்பு செய்­ப­வர்­களும் வரு­மானக் கணக்கை மறைப்­ப­வர்­களும் தங்­கத்தை வாங்கி குவிப்பர். இவ்­வாறு கணக்­கில் காட்­டப்­ப­டாத தங்­கத்தை வைத்­தி­ருப்­போ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்க மத்­திய நிதி அமைச்சு முடிவு செய்­துள்­ளது.

தங்­கத்­தைப் பதுக்­கி­ய­வர்­கள் வரு­மான வரித்­து­றை­யி­டம் தாமாக முன்­வந்து தக­வல் தெரி­வித்­தால் பொது­மன்­னிப்­புத் திட்­டத்­தின்­கீழ் வரி­யும் அப­ரா­த­மும் அவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்டு சிறைத்­தண்­ட­னை­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­ப­டு­வர். இது­தொ­டர்­பாக பிர­த­மர் நரேந்­திரமோடி­யி­டம் பேச்சு நடத்­திய பிறகு இந்த பொது மன்­னிப்பு திட்­டத்தை செயல்­ப­டுத்த நிதி அமைச்சு முடிவு செய்­துள்­ள­தா­கத் தெரி­கிறது. இது­கு­றித்து சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளி­டம் பேசி வரு­வ­தா­க­வும் இறுதி விவ­ரங்­கள் விரை­வில் அறி­விக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தங்­கத்­தின் தேவை­யை­யும் இறக்­கு­ம­தி­யை­யும் குறைக்­கும் நோக்­கில் பிர­த­மர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டு சில திட்­டங்­களை அறி­மு­கம் செய்­தார். அதன் ஒரு பகு­தி­யாக அசல் தங்­கத்­துக்­குப் பதில் தங்­கப்­பத்­தி­ரங்­கள் வெளி யிடப்­பட்­டன. ஆயி­னும் இத்­திட்­டத்தால் பலன் கிட்­ட­வில்லை. அத­னைத் தொடர்ந்து பொது­மன்­னிப்பு யோசனை பிறந்­துள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon