அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையை காக்க தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைக் காக்கவேண்டும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு நாடு முழுவதும் இருந்து 600 வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘அச்சுறுத்தலில் நீதித்துறை: அரசியல், தொழில்ரீதியான அழுத்தங்களில் இருந்து நீதித்துறையைப் பாதுகாப்பது அவசியம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பார் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மனன்குமார் மிஸ்ரா, பிங்கி ஆனந்த், அதிஷ் அகர்வாலா, சேத்தன் மிட்டல் உள்ளிட்ட 600 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில் ஒரு சில சுயநலவாதிகள் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் வழக்கை எந்த நீதிபதி விசாரிக்கவேண்டும், எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்பதில் தலையிட முயற்சிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், வழக்கறிஞர்களின் கடிதத்தை தனது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் பகிர்ந்து, தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் பிரதமர் மோடி.

அவரது பதிவில், மற்றவர்களை மிரட்டுவது, கொடுமைப்படுத்துவது எல்லாம் காங்கிரசின் கலாசாரம் என பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

“50 ஆண்டுகளுக்கு முன்பு அர்ப்பணிப்பு உணர்வுமிக்க நீதித்துறை வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது.

“ஆனால், மற்றவர்களிடம் இருந்து அர்ப்பணிப்பு உணர்வை எதிர்பார்க்கும் காங்கிரஸ், நாடு மீதான அர்ப்பணிப்பில் இருந்து நழுவிக்கொள்கிறது.

“இதனால்தான் 140 கோடி இந்தியர்களும் அக்கட்சியை நிராகரித்துள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

வழக்கறிஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒருசில சுயநல சக்திகள் தங்களது அச்சுறுத்தல் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர்.

அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளில் அவர்களது நிர்பந்த நடவடிக்கைகள் வெளிப்படையாகத் தெரிகிறது.

இத்தகைய தந்திரங்கள் நமது நீதிமன்றத்தை பாதிப்பதுடன், நமது ஜனநாயக கோட்பாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைகின்றன.

தங்கள் வழக்குகளை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முயற்சி செய் கின்றனர். நீதிபதிகள் யார் என்று தெரிந்துகொண்டு, அவர்கள் எப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று அச்சுறுத்தும்வகையில் சமூக வலைத்தளங்களில் பொய்களை பரப்புகிறார்கள்.

பொதுமக்களுக்கு நீதிமன்றம் மீதுள்ள நம்பிக்கையை அசைத்து பார்க்கும்வகையில் அவர்களது கருத்துகள் இருக்கின்றன.

சாதகமான தீர்ப்பு எனில் அதனைப் புகழ்வதும், எதிரான தீர்ப்பு என்றால் அதை அவமதிப்பதுமாக இருக்கின்றனர்.

ஆகவே, உச்ச நீதிமன்றம் வலிமையாக நிற்க வேண்டும். இத்தகைய தாக்குதல்களில் இருந்து நீதிமன்றங்களைப் பாதுகாக்க வேண்டும்.

மௌனமாக இருப்பதோ, எதுவும் செய்யாமல் இருப்பதோ சம்பந்தப்பட்டவர்களுக்கு கூடுதல் வலிமை அளிப்பதாக ஆகிவிடும். மௌனம் காக்கவேண்டிய நேரம் இதுவல்ல.

கடந்த சில ஆண்டுகளாக இம்முயற்சிகள் அடிக்கடி நடந்து வருகின்றன. தலைமை நீதிபதியின் தலைமைத்துவம் கடினமான தருணங்களில் மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!