இந்தியாவில் 7% பொருளியல் வளா்ச்சி: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி ஏழு விழுக்காடாக இருக்கும் என ஆசிய வளா்ச்சி வங்கி கணித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த நிதியாண்டில் 6.7 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடாக உயரும் என்றும் நுகர்வோரின் தேவை, தனியார் துறை முதலீடு காரணமாக இந்த வளர்ச்சி ஏற்படும் என்றும் வங்கி கூறியுள்ளது.

இதுகுறித்து, இந்த வங்கியின் ஏப்ரல் மாதப் பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியப் பொருளியல் வளா்ச்சி 6.7 விழுக்காடாக இருக்கும் என முன்னதாக கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பொதுத் துறை, தனியாா் துறை முதலீடு, நுகா்வோர் தேவையில் காணப்படும் முன்னேற்றம் உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில் இந்தியாவின் பொருளியல் 7 விழுக்காடு வரை வலுவான வளா்ச்சியை எட்டும்.

இந்த வளர்ச்சி வரும் நாள்களில் தொடரும் என்றும் பணவீக்கம் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து பின்னடைவைச் சந்திக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஆசியா, பசிபிக் வட்டாரத்தில் மிகப்பெரிய வளா்ச்சி இயந்திரமாக இந்தியா இருக்கும்.
அடுத்த 2025-26ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 7.2 விழுக்காடாக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டின் வளா்ச்சி மதிப்பீடு 2022-23 நிதியாண்டில் முன்னுரைக்கப்பட்ட 7.6 விழுக்காடு வளர்ச்சியைவிடவும் குறைவாகும்.

நுகா்வு முடக்கப்பட்டிருந்தாலும் வலுவான முதலீடு முந்தைய நிதியாண்டில் பொருளியல் வளா்ச்சியை உறுதிப்படுத்தின.

நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளியல் வளா்ச்சி குறித்த ஆசிய வளா்ச்சி வங்கியின் கணிப்பும் ரிசா்வ் வங்கியின் கணிப்பும் ஒன்றாக உள்ளது.

வழக்கமான பருவமழை, மிதமான பணவீக்கம், உற்பத்தி, சேவைத் துறைகளின் நீடித்த வேகம் ஆகியவற்றின்படி நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளியல் வளா்ச்சி 7 விழுக்காடாக இருக்கும் என ரிசா்வ் வங்கி கடந்த வாரம் கணிப்புகளை வெளியிட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!