மற்றவர்கள் சாதிக்க உதவும் ஹித்தேஷ்

சுதாஸகி ராமன்

நடப்பது, பேசுவது, ஆடைகள் அணிவது என்று அன்றாடம் மேற் கொள்ளும் எளிய காரியங்களைச் செய்ய சிறு வயதிலிருந்தே சிரமப்பட்ட ஹித்தேஷ் ராம்சந்தானி, 25, இன்று பலருக்கு நம்பிக்கை ஊட்டும் சுடராகத் திகழ்கிறார். பிறந்தது முதல் பெருமூளை வாதத்தால் (Cerebral Palsy) பாதிக்கப்பட்ட அவர் தமது உடற்குறையினால் பொது இடங்களில் உரையாற்ற அஞ்சினார். பள்ளியில் சக மாணவர்களுக்கு முன்னிலையில் பேச முடியாமல் பலமுறை பதற்றம் அடைந்ததும் உண்டு.

எனினும், தம்முடைய பயத்தைப் போக்கி தைரியமாக மக்களின் முன் பேசுவதற்குப் பயிற்றுவிப்பாளரின் உத வியை அவர் நாடினார். கடுமையான பயிற்சிக்குப் பின் அவருக்கு தன்னம் பிக்கை கூடியது. தற்ப்போது தன்முனைப்புப் பேச்சாளராக ஹித்தேஷ் முன்னேறியுள்ளார். 'பெட்டர் தான் நார்மல்' (Better Than Normal) எனும் திட்டத் தைத் துவக்கி ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் வாழ்க்கையில் புதிய மாற்றத்தை அவர் உருவாக்கி வருகிறார்.

உறவினர் விக்கி வஸ்வானி யின் உந்துதலில் இத்திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இருவர், 'பெட்டர் தான் நோர்மல்' இயக்கத்தின் கீழ் ஒரு புத்தகத்தை வெளியிட் டதுடன் பயிற்றுவிப்பாளராகப் பலருக்கும் ஊக்கமளித்து வரு கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!