தொடரும் வாசிப்பு விழா கொண்டாட்டம்

தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கிய நிகழ்வான வாசிப்பு விழா வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது. இவ்வாண்டின் கருப் பொருள் ‘பயணம்’. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வாசிப்பு விழா இவ்வாண்டு ஐந்தாம் முறை யாக நடத்தப்படுகிறது.

பிரபல உள்ளூர் எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் சிறப்புரை யோடு இவ்வாண்டின் தமிழ் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

வாசிப்பு விழா தொடரில் சிறப் புரை இடம்பெறுவது இதுவே முதல்முறை. “இதற்கு Grab தேவைப்படாது! கதைகளோடு பயணித்தல்” என்ற தலைப்பில் தான் சந்தித்த சில சம்பவங்களைப் பற்றியும் அவை எப்படிக் கதை களாக மாறின அல்லது மாறக் கூடும் என்பதைப் பற்றியும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள் வார் திரு சித்துராஜ்.

அதே நிகழ்வில் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறக் கூடிய ஒரு முயற்சியும் மேற் கொள்ளப்படும்.

நாள்/நேரம்: வரும் 22ஆம் தேதி, சனி மாலை 5 மணி

இடம்: விக்டோரியா ஸ்திரீட்டில் உள்ள தேசிய நூலகத்தின் 16வது மாடியில் உள்ள போட் அரங்கு.

பயணக் கட்டுரை பயிலரங்கு

இதைத் தொடர்ந்து மறுநாள் ஞாயிறன்று பயணக் கட்டுரை எழுதும் பயிலரங்கை வழிநடத்து கிறார் கிருத்திகா சிதம்பரம்.

இந்தப் பயிலரங்கில் பயணத் தைக் கதையாக்கும் கலை, அந்தக் கதைக்குத் தேவையான புகைப் படங்களை எடுக்கும் முறை, பய ணம் செய்தவர்களிடம் பேட்டி எடுக்கும் உத்தி, தனக்கான நடையைத் தேர்ந்தெடுப்பது குறித்து கற்றுக்கொள்ளலாம்.

நாள்/நேரம்: வரும் 23ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 2.30 மணி.

இடம்: தேசிய நூலகத்தின் ஐந்தாவது மாடி.

இலக்கியப் படைப்பு குறித்த

எண்ண வெளிப்பாடு

அதேநாள் மாலை எழுத்தாளர் எம்.கே.குமார் தன்னை இலக்கியப் பயணத்தில் ஈடுபடுத்திய பல்வேறு இலக்கியப் படைப்புகள் குறித்த தன் எண்ணங்களையும் உணர்வு களையும் பகிர்ந்துகொள்வார்.

நாள்/நேரம்: வரும் 23ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணி.

இடம்: அங் மோ கியோ பொது நூலகத்தின் முதல் தள நிகழ்ச்சி கள் நடத்தப்படும் பகுதி.

சிறார்களுக்கு இரு நிகழ்வுகள்

‘குதூகலக் கொண்டாட்டக் கதைகள்’ என்ற தலைப்பில் 4 முதல் 9 வயது வரையுள்ள சிறுவர் களுக்கு உகந்த கதை நேரம் இரு வெள்ளிக்கிழமைகளில் நடை பெறும். விறுவிறுப்பான கதைகள், நகைச்சுவை கதாபாத்திரங்களைப் பற்றி அறிந்துகொள்ளவும் அவற் றைச் சார்ந்த கைவினைக் கலை களில் ஈடுபடவும் நூலகர்கள் உதவுவர்.

நாள்/நேரம்: ஜூன் 28, வெள்ளி இரவு 7 மணி.

இடம்: பிடோக் நூலகம்.

நாள்/நேரம்: ஜூலை 12, வெள்ளி இரவு 7 மணி

இடம்: புக்கிட் பாஞ்சாங் பொது நூலகம்.

புலாவ் உபின் தீவில் வாசிப்பு

இவ்வாண்டு அறிமுகமாகும் மற்றொரு புதிய அம்சம், புலாவ் உபின் தீவுக்குச் சென்று வாசிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது.

ஒலி 96.8ன் ஜெய்கணே‌ஷும் எழுத்தாளர் மீனாட்சி சபாபதியும் இந்த வெளிப்புற நடவடிக்கையை வழிநடத்துவர்.

சுவையான உணவுடன் இலக் கியத்தில் மூழ்க கடல் கடந்து செல்லும் ஒரு குதூகலப் பயண மாக அது அமையும்.

நாள்/நேரம்: ஜூன் 29, சனி காலை 9 மணி

இடம்: புலாவ் உபின் தீவு.

எழுத்தாளர்களின் அனுபவம்

என் எழுத்துப் பயணம் என்ற சிறப்பு உரையாடல் தொடரில் சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்ற வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களான அ.கி.வரத ராசனும் சித்ரா ரமே‌ஷும் தங்கள் எழுத்துப் பயணத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, சிங்கப்பூர் இலக் கியச் சூழல் கடந்த ஆண்டுகளில் கண்ட மாற்றங்கள் குறித்தும் அலசி ஆராய்வார்கள்.

நாள்/நேரம்: ஜூன் 30, ஞாயிறு காலை 11 மணி.

இடம்: மத்திய பொது நூலகம், பல நோக்கு அறை.

கலையும் இலக்கியமும் நம் வாழ்க்கைப் பயணத்தில் எவ்வாறு துணை வருகின்றன? வழிகாட்டி யாகவா? வழித்துணையாகவா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் ஒரு சுவையான நிகழ்வு நடைபெறும். முனைவர் க இராஜகோபாலனும் கண்ணன் சேஷாத்திரியும் வாச கர்களை ஒரு கலை இலக்கியப் பயணத்துக்கு அழைத்துச்செல்வர்.

நாள்/நேரம்: ஜூன் 30, ஞாயிறு மாலை 4 மணி.

இடம்: தேசிய பொது நூலகக் கட்டடத்தின் 5வது மாடியில் உள்ள பாசிபிலிடி அறை.

ஜூலையில் மலரும் நிகழ்வுகள்

கடந்த இரண்டு ஆண்டுகளாக இளையர்களை ஈர்ப்பதில் வெற்றி கண்ட ‘தி எஸ்கேப் ரூம்’ என்ற நிகழ்ச்சி இவ்வாண்டும் நடைபெற வுள்ளது. தமிழ் நூல்களை அடிப் படையாகக் கொண்டு வித்தியாச மான அமைப்பு, சுவாரசியமான புதிர்கள், பரபரப்பான கதைகள் ஆகியவற்றுடன் மாணவர்கள் குறியீடுகளை முறியடிக்க வேண் டும். சிங்கப்பூர் நிர்வாகப் பல்க லைக்கழகத்தின் தமிழா என்ற அமைப்பின் மாணவர்கள் இதனை வழிநடத்துவர்.

ஜூலை 3, 4ஆம் தேதி, புதன், வியாழன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, தேசிய நூல கத்தின் தளம் 1, வருகையாளர்கள் விரிவுரை அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

திரைப்படம் திரையீடு

‘சென்னை 2 சிங்கப்பூர்’ என்ற தமிழ்த் திரைப்படம் ஜூலை 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் உள்ள தி போட் அரங்கில் திரையிடப்படும். அப்படத்தின் இயக்குநர் அபாஸ் அக்பரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மகிழ்விக்கும் இசைப்பயணம்

கடந்த ஆண்டு நல்ல வரவேற் பைப் பெற்ற பாட்டு மன்றம், இவ் வாண்டு ‘இசைப்பயணம்’ என்ற தலைப்பில் இடம்பெறுகிறது.

இலக்கியத்தையும் இசையையும் இணைத்து, திரைப்படப் பாடல் களையும் சேர்த்து மீண்டும் மகிழ் விக்க வருகிறார்கள் பரசு கல்யா ணும் அவருடைய இசைக் குழு வினரும். அவர்களோடு சேர்ந்து நகைச்சுவை கலந்து நிகழ்ச்சியைப் படைக்க உள்ளார் முனைவர் மன்னை ராஜகோபாலன்.

ஜூலை 7ஆம் தேதி, ஞாயிறு மாலை 6 மணிக்கு தேசிய நூல கத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

சமையலுக்கும் முக்கியத்துவம்

ஒரு வித்தியாசமான சமையல் நிகழ்ச்சி ஜூலை 19ஆம் தேதி, வெள்ளி மாலை 6 மணிக்கு செங்காங் பொது நூலகத்தின் 4வது மாடியில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. சிறப்பு சமையல் வல்லுநர் பாலாவை நேரடியாகச் சந்திக்க அது ஓர் அரிய வாய்ப்பாக அமை யும். பாரம்பரிய உணவுகளை அவர் செய்து காட்டுவதோடு சமையல் கலையில் அவருடைய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொள்வார்.

தமிழ்க் கவிதைக்கு சீன, மலாய்க் கவிஞர்கள் கருத்து

கவிமாலை வெளியிட்டிருக்கும் ‘முத்திரை வரிகள்’ அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ஜூலை மாதம் முழுதும் ஒவ்வொரு நாளும் ஒன்வொன்றாக சமூக ஊடகங்களில் பகிரும் முயற்சியாக “திறமையான புலமையெனில்” என்ற நிகழ்ச்சி ஜூலை 20, ஞாயிறு மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெறும்.

அன்று ஒரு சீனக் கவிஞரும் ஒரு மலாய்க் கவிஞரும் கவிமாலை நிகழ்வில் பங்குபெற்று, வெளி யிடப்பட்டிருக்கும் அனைத்து கவிதைகளைப் பற்றியும் தங்கள் மொழிக் கவிதைகளோடு ஒப்பிட்டு தங்களது கருத்துகளை ஆங் கிலத்தில் பகிர்ந்துகொள்வார்கள்.

இலக்கிய, பயண அனுபவம்

‘கல்லும் சொல்லாதோ கவி’ என்ற தலைப்பில் திரு பொன் மகாலிங்கம் தம் இலக்கியத்துறை அனுபவங்களையும் அண்மையில் அங்கோர்வாட் என்ற பயணக் கட் டுரை நூலைப் பதிப்பித்த அனு பவத்தையும் பகிர்ந்துகொள்வார்.

ஜூலை 21ஆம் தேதி, ஞாயிறு பகல் 2 மணிக்கு தேசிய நூல கத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

ரவா உப்புமா குழுவினரின் நகைச்சுவை

சொந்த வாழ்க்கை அனுபவங் கள், சமூக நிகழ்வுகள் இவை அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லவல்ல நல்ல பேச்சாளர்களை முன் நிறுத்தும் முயற்சியாக ரவா உப்புமா குழுவினர் நகைச்சுவை நிகழ்ச்சியை வழிநடத்துவர்.

ஜூலை 27ஆம் தேதி சனி மாலை 5 மணிக்கு தேசிய நூல கத்தின் ‘பாசிபிலிடி அண்ட் இமே ஜினேசன்’ அறையில் நடைபெறும்.

வாசிப்பு விழாவை நிறைவு செய்யும் விதமாக மூன்று வெவ் வேறு அமைப்புகளுடன் இணைந்து ‘வாருங்கள் வாசிப்போம்’ என்ற நிகழ்ச்சியை தேசிய நூலகம் நடத்தும்.

இவற்றில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு 10 பேரும் 15 நிமி டங்களுக்கு நூல் வாசித்தால், தேவைப்படும் ஒருவருக்கு நூல் இலவசமாக வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!