அலாவுதீன் கதைக்கு அற்புதம் சேர்த்த இசை நாடகம்

ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்

மேடையில் பிரகாசமாக ஜொலித்த மேடை அமைப்பை ரசிப்பதா, இல்லை நடிகர்கள் தங்களுடைய கதாப்பாத்திரங்களைத் தத்ரூபமாக மேடையேற்றியதைக் கண்டு மகிழவா என இருந்தது.

அலாவுதீன் கதையை இசை நாடகமாகப் பார்த்த அனுபவம் மிகவும் சிறப்பாகவும் இருந்தது. அது தொடர்ந்து என்னை வியப்பூட்டியது.

அலாவுதீன் இசை நாடகம் பெரும்பாலான நேரங்களில், 1992 ஆண்டில் வெளியிடப்பட்ட திரைப்படம் கூறும் கதையையே தவறாமல் கூறியது.

கதையில் மாற்றப்பட்ட ஒரு சில அம்சங்களும் சிறப்பாக படைக்கப்பட்டிருந்தன.

மற்றபடி, நம் மனதைக் கவரும் கதைகள் மற்றும் பாடல்கள் மிக நன்றாக மேடையேற்றப்பட்டன.

தொடக்கத்தில் வரும் "அரேபியன் நைட்ஸ்", "யூ நெவர் ஹாட் அ ஃப்ரெண்ட் லைக் மி", "அ ஹோல் நியூ வொர்ல்ட்", போன்ற பாடல்கள் அரங்கத்தை நிறைத்த பார்வையாளர்களை மகிழவைத்தன.

இசை நாடகத்தை காண வந்திருக்கும் பார்வையாளர்களுக்குப் பொருத்தமாக அமைக்கப்பட்டிருந்தது.

கதையின் ஆரம்பத்தில், ‘ஜீனீ’ எனும் பூதம் மந்திர விளக்கை அறிமுகப்படுத்தும் நேரத்தில், தவறாக ஒரு சிறிய மெர்லையன் சிலையை வெளியே எடுத்ததைப்போல் காட்சியளிக்கப்பட்டது. சிங்கப்பூரின் அடையாள சின்னங்களில் ஒன்றான மெர்லையனைக் கண்ட பார்வையாளர்கள் சிரித்து ரசித்தனர்.

இந்த இசை நாடகம் ஒரு வகையில் 1992ஆம் ஆண்டு திரைப்படத்திலிருந்தும், 2019ல் வந்த திரைப்படத்திலிருந்தும் மிகவும் வேறுபட்டது.

அலாவுதீன் கதையில் முக்கிய கதாப்பாத்திரமான அவருடைய குரங்கு "அபூ" மேடை நாடகத்தில் வரவில்லை.

அதற்குப் பதிலாக, அலாவுதீனுக்கு மூன்று ஆண் தோழர்கள் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.

கதையின் தொடக்கத்தில், அபூ இல்லாமல் இந்த கதை இன்னும் கவர்ச்சியாக இருக்குமா என்று எனக்கு சந்தேகம் எழுந்தது.

ஆனால் அந்த மூன்று நண்பர்களின் கதாப்பாத்திரங்கள் அலாவுதீனுக்கு சிறந்த துணைகளாக கதையில் நன்றாக இணைக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும், அலாவுதீன் தண்ணீரில் மூழ்கும் காட்சியை மேடையேற்றாமல், அதற்குப் பதிலாக கதையில் வேறுவிதமான திருப்பம் இருந்தது.

2019ஆம் ஆண்டு திரைப்படத்தில் புதிதாக "ஸ்ப்பீச்லெஸ்" பாடல் வந்ததுபோல, இசை நாடகத்திலும் புதிய பாடல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை மேடை நாடக அனுபவத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

இசை நாடகத்தில் மிகவும் சிறப்பாக இருந்ததற்கு கண்டிப்பாக கதாப்பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த இதர நடிகர்களும் பெரிய பங்காற்றியிருந்தார்கள்.

அவர்கள் கதாப்பாத்திரத்தை விட்டுக்கொடுக்காமல், தங்களுடைய சொந்த பாணியை நடிப்பில் சங்கமிக்கச் செய்தனர்.

ஒவ்வொரு நடிகரும் தம் கதாப்பாத்திரத்தை மிகவும் அற்புதமாக மேடையேற்றியிருந்தார்கள்.

அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்ததோடு அவர்களை மனம் நெகிழவும் செய்து, அவர்களுக்கு ஒரு இன்பமான இசை நாடகம் கண்ட அனுபவத்தையும் அலாவுதீன் இசை நாடகம் வழங்கியது.

செப்டம்பர் 1ஆம் தேதி வரை மரீனா பே சாண்ட்ஸ் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!