சீரற்ற இதயத்துடிப்பு சிக்கலில் முடியலாம்; சிகிச்சை அவசியம்

இந்தியர்களிடம் காணப்படும் சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினை மேற்கத்திய நாட்டவர்களுக்குக் காணப்படுவதிலிருந்து மாறுபட்டு உள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியர்களுக்குச் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. அத்துடன் அவர்களுக்கு இந்த நோயின் தாக்கம் கடுமையான தாகவும் இருக்கலாம். அதனால், சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினையுடன் தொடர்புடைய வாத நோய் இந்தியர்களுக்கு ஏற்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது.

இதயத்துடிப்பு மிக வேகமா கவோ, மிக மெதுவாகவோ அல்லது சீரற்றோ இருப்பது அசாதாரண நிலை. இது சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினை எனப்படுகிறது.சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சி னையைப் புரிந்துகொள்ள இதயத் தின் அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியம்.

இதயம், உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்த நாளங்கள் ஆகியவற்றை உள்ளடக் கியது இதய அமைப்பு. சுருங்கி விரிவதன் மூலம் ரத்தத்தை நாளங்களின் வழியாகச் செலுத்தக் கூடிய தசை அமைப்பே இதயம்.

இதய அமைப்பு (ஆரிக்கிள், வெண்ட்ரிக்கிள் எனும் நான்கு அறைகள்), மின்னியல் அமைப்பு (இதயத்தை துடிக்குமாறு சைகை அளிக்கும் அமைப்பு), சுழற்சி அமைப்பு (வெப்ப ஆற்றல், ஆக்சிஜன் போன்றவற்றை அளிக் கும் ரத்த சுழற்சிப் பாதை) ஆகிய மூன்று அமைப்புகளின் ஒருங் கிணைந்த முயற்சியால் இதயம் அதன் செயல்பாடுகளைச் சீராக மேற்கொள்கிறது. இதயம் துடிப்பதன் காரணமாக இதயத்திலிருந்து ரத்தம் நாளங் களின் வழியாக பம்ப் (விசை யேற்றம்) செய்யப்படுகிறது. இதயத் தின் இயற்கையான மின்கலம் எனக்கூறப்படும் ‘சைனஸ் நோட்’ எனப்படும் மிகச்சிறிய அமைப்பில் இருந்து இதயத் துடிப்பைத் தொடங்குவதற்கான சைகை செய் யப்படுகிறது.

‘சைனஸ் நோட்’ உருவாக்கும் மின்னியல் உந்துவிசை இதயக் கடத்துகை அமைப்பு என அறியப்படும் சிறப்பு திசுக்களின் வழியாக வெண்ட்ரிக்கிள் எனும் இதயத்தின் அறைக்கு விசை யேற்றம் செய்யப்படுகிறது. இந்த மின்னியல் உந்துவிசை இதயத் தசைகளை சுருங்கச் செய்து ரத்தத்தை நாளங்களின் வழியாக வெளியேற்றுகிறது.

ஓய்வாக இருக்கும்போது பொதுவாக மனிதரின் இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 72 என்ற அவில் இருக்கும். ஆனால், இந்த அளவானது 60 முதல் 100 வரை பொதுவாக மாறுபடக்கூடும். எனவே, இதய மின்னியல் அமைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் சீரற்ற இதயத்துடிப்புப் பிரச்சினை ஏற்படக்கூடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!