வாக்களிக்க வலியுறுத்தும் குறும்படங்களில் பிரபல நடிகைகள்

சென்னை: தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் குறும்படங்கள் தயாரிக்க உள்ளது. இக்குறும்படங்களில் பிரபல நடிகைகள் சுருதிஹாசன், சமந்தா ஆகியோர் நடிக்க உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடத்த தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதாகக் கூறினார். "அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரை வைத்து குறும்படங்கள் தயாரித்து திரையரங்குகளில் வெளியிட்டுள்ளோம். விரைவில் நடிகைகள் சுருதிஹாசன், சமந்தா, நடிகர் சித்தார்த் ஆகியோரை வைத்து ஒரு குறும்படம் எடுக்க உள்ளோம். மேலும் நயன்தாரா உள்ளிட்ட வேறு சில நடிகைகளை வைத்தும் விழிப்புணர்வூட்டும் குறும்படம் எடுக்க உள்ளோம்," என்றார் ராஜேஷ் லக்கானி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!