கைபேசியால் உண்டாகும் பிரச்சினைகளை அலசுகிறது ‘சண்டிக்குதிரை’

செல்ஃபி மோகத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அலசுகிறது 'சண்டிக் குதிரை' படம். அன்புமதி இயக்குகிறார். "விஞ்ஞான வளர்ச்சியில் நன்மை, தீமை இரண்டும் கலந்து இருக்கிறது. கைபேசி வைத்திருக்காத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட கைபேசி இன்று வேறு பரிமாணத்துக்கு மாறிவிட்டது. "செல்ஃபி மோகத்தால் விளையும் பிரச்சினைகள்தான் இப்படத்திற்கான திரைக்கதையின் முக்கிய அம்சம். புதுக்கோட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. நகைச்சுவை கலந்த திகில் கதையாக இது உருவாகிறது.

"நாயகனாக ராஜ்கமல் நடிக்க நாயகியாக மானசா அசத்துகிறார். மேலும், கஞ்சா கருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். வீரா ஒளிப்பதிவைக் கவனிக்க வாரஸ்ரீ இசையமைக்கிறார். இதுவரை இப்படியொரு கதைக்களம் தமிழில் எந்தப் படத்துக்கும் அமையவில்லை. எனவே இந்தப் படம் ரசிகர்களை நிச்சயமாகக் கவரும் என நம்புகிறோம்," என்கிறார் இப்படத்தின் இயக்குநர் அன்புமதி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!