விசாரணை கோரும் அதிகாரி

முழு நேர தேசிய சேவையாளர் ஒரு வர் கடந்த மே மாதம் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிங்கப்பூர் குடி மைத் தற்காப்புப் படை அதிகாரி ஒருவர் வழக்கு விசாரணை கோர எண்ணம் கொண்டுள்ளார். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முழுநேர தேசிய சேவை யாளரான 22 வயது கார்ப்பரல் கோக் யுவன் சின், பகடிவதை (ragging) சம்பவத்தின் தொடர்பில் துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தின் 12 மீட்டர் ஆழமான நீரேற்றக் கிணற்றில் மூழ்கி மாண்டுகிடக்கக் காணப்பட்டார். மலேசியாவைச் சேர்ந்த சிங்கப் பூர் நிரந்தரவாசியான அவர், அப்போ து இன்னும் இரு நாட்களில் தேசிய சேவையை முடிக்க இருந்தார்.

முதலாம் மூத்த வாரண்ட் அதி காரி நஸான் முகமது நஸி, 40, எனும் அந்த அதிகாரியின் வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்து ரையாடல் அடுத்த மாதம் 1ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப் ப ட்டது. கார்ப்பரல் கோக்கை அந்தக் கிணற்றுக்குள் இறங்க நெருக் குதல் அளித்த மற்ற அதிகாரிக ளைத் தடுக்க நஸான் தவறி யதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து அதி காரிகளில் நால்வர் நேற்று நீதிம ன்றத்திற்குத் திரும்பினர். அவர் கள் மீதான வழக்கு விசாரணைக்கு முந்தைய கலந்துரையாடலும் அடுத்த மாதம் 1ஆம் தேதி நடைபெறும்.