இரவு விடுதிகளில் குற்றங்களைத் தடுக்க புதிய இயக்கம்

குடிபோதையில் நிலை தடுமாறி தங்களை கவனித்துக் கொள்ள இயலாதோருக்கு உதவி செய்வ தற்கும் வாக்குவாதங்கள் கைக லப்பாக உருவெடுப்பதைத் தடுப்ப தற்கும், இரவு நேர கேளிக்கை இடங்களில் உள்ள ஊழியர் களுக்குப் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது.

மதுக்கூடங்களுக்குச் செல் வோர், கேளிக்கை இடங்களில் பொதுவாக நடைபெறும் குற்றங் களை விளக்கும் சுவரொட்டி களையும் அங்கே காணலாம். அத்தகைய இடங்களில் நிகழும் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம். மதுக்கூடங்களில் விவேகமான முறையில் பொழுதுபோக்குவதை ஊக்குவிக்கும் இயக்கம் ஒன்றை போலிஸ் நேற்று தொடங்கியது. தேசிய குற்றத்தடுப்பு மன்றமும் கிளார்க் கீ, ஆர்ச்சர்ட் ரோடு, மரினா பே, செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள பெரிய கேளிக்கை கூடங்களும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளிக் கின்றன. கேளிக்கை கூடங்களில் நிகழும் குற்றச் சம்பவங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளி வந்ததைத் தொடர்ந்து இந்த இயக்கம் தொடங் கப்பட்டது.

இத்தகைய இடங்களில் மானபங்கச் சம்பவங்கள் எண் ணிக்கை கடந்த மாதம் 63 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தின் எண்ணிக்கை யான 46ஐக் காட்டிலும் 37% அதிகமாக உள்ளது.