திருமணம் குறித்த லட்சியத்துடன் வாழும் இளைஞனின் கதை

கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி வரலட்சுமி. இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் படம் இது. எஸ்.முத்துக்குமரன் இயக்குகிறார். “பெற்றோர் பார்த்து தேடிப்பிடிக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் நாயகனின் விருப்பம். ஆனால் வரலட்சுமிக்கு அவர் மீது காதல் மலர்கிறது.

அது மட்டுமல்லாமல் நாயகனின் வீட்டில் எல்லோருமே காதல் மணம் புரிந்தவர்கள். அவர்களும் நாயகனின் எண்ணத்துக்கு இடையூறாக உள்ளனர். அனைத்தையும் கடந்து அவனது லட்சியம் நிறைவேறியதா என்பதுதான் கதை. விமலுக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். அதனால் இந்தக் கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்துள்ளார். வரலட்சுமிக்கு இதில் ஆசிரியை வேடம். அவரும் அசத்தி உள்ளார்,” என்கிறார் எஸ்.முத்துக்குமரன். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, பாடல்களை யுகபாரதி எழுதியுள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்