தோல்வியின் பிடியிலிருந்து தப்பிய போர்ச்சுகல் குழு

லிஸ்பன்: அனைத்துலக நட்புமுறை காற்பந்து ஆட்டத்தில் போர்ச்சு கலும் குரோவே‌ஷியாவும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. இந்த ஆட்டம் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற்றது. உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய பிறகு நேற்றுதான் குரோவே‌ஷியா முதல்முறையாகக் களமிறங்கியது. ஆட்டத்தின் 18வது நிமிடத் திலேயே குரோவே‌ஷியாவின் இவான் பெரிசிச் கோல் போட்டார். இருப்பினும், குரோவே‌ஷி யாவின் முன்னிலை நீடிக்க வில்லை. ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் போர்ச்சுகலின் பெப்பே தலையால் முட்டிய பந்து வலைக்குள் சென்றது. மற்றோர் ஆட்டத்தில் பெருவை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது ஹாலந்து.

போர்ச்சுகலின் ஜோவாவ் கென்சேலோவிடமிருந்து பந்தைப் பறிக்கும் குரோவே‌ஷியாவின் போர்னா பெரிசிச் (இடது). படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு