ஆத்மிகா: அடம்பிடிக்க மாட்டேன்

தமிழ்த் திரையுலகம் தாம் எதிர்பார்த்த அளவுக்கு ஆரோக் கியமாக இல்லை என்கிறார் இளம் நாயகி ஆத்மிகா. திறமையை நிரூபிக்கும் வரை நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்றும் அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.

“”பெரிய நாயகிகள் என்றால் அவர்களுக்கான வரவேற்பு பலமாக இருக்கிறது. ஆனால் வளரும் நடிகைகளுக்கு அப்படி இல்லை. அதற்காக புதுமுகங்களுக்கு அறவே மரியாதை இல்லை என்று சொல்லமாட்டேன். படத்துக்குப் படம் எல்லாமே மாறுபடுகிறது. அந்த வகையில் நாம் என்ன மாதிரியான படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியம்.

“வளர்ந்த நடிகைகளுக்கு உள்ள வரவேற்பையும் மரியாதையையும் பார்க்கும்போது நாமும் வளரவேண்டும் எனும் வேகம் மனதில் தோன்றுகிறது,” என்கிறார் ஆத்மிகா. கோடம்பாக்கத்தில் தமிழ்ப் பெண்களுக்கு அவ்வளவாக வாய்ப்புக் கிடைப்பதில்லை என்று குறிப்பிடுபவர், வட இந்திய நடிகைகளைப் போலவே தமிழ் நடிகைகளும் அபாரத் திறமை கொண்டவர்கள்தான் என்கிறார். “நான் எதையும் குறையாகச் சொல்ல வில்லை. தமிழ்ப் பெண் என்பதற்காக வாய்ப்புக் கொடுக்கவேண்டும் எனும் கட்டா யம் இல்லை. ஆனால், அவர்களுக்கும் சில வாய்ப்புகளைத் தந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே என் கோரிக்கை.”

நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?

“எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் முதலில் ரசிகர்களுக்கு அது பிடிக்கவேண் டும். அவர்கள் மனதில் இடம்பிடிக்கும் எந்தக் கதாபாத்திரமும் எனக்கும் பிடித்தமானதுதான். “எனக்குப் பிடித்த கதாபாத்திரம் என்று நடித்து, அது மக்களுக்குப் பிடிக்காமல் போனால் எல்லாமே வீணாகிவிடும். எனவே குறிப்பிட்ட கதாபாத்திரங்களில்தான் நடிப்பேன் என அடம்பிடிக்க மாட்டேன்,” என்று சொல்லும் ஆத்மிகா அண்மை யில் பார்த்து ரசித்துள்ள படம் ‘கோலமாவு கோகிலா’.

ரசிகர்கள் தங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் படம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் வெற்றிப்படம்தான் என்கிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்