தமிழ்நாட்டில் ‘மெர்சி ரிலீஃப்’ குழு

சிங்கப்பூரைச் சேர்ந்த மனிதாபி மான, அரசாங்கம் சாரா அமைப்பான 'மெர்சி ரிலீஃப்', அண்மையில் வெள்ளத்தால் பாதிப்படைந்த தமிழகத்துக்குக் குழு ஒன்றை அனுப்பி வைத்து உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தை உலுக்கிய வெள்ளத்தால் நிலைகுலைந்து போனவர்களின் வாழ்க்கையை வழக்கநிலைக்குக் கொண்டு வரும் நோக்குடன் நடத்தப்படும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடரவும் மறுவாழ்வுத் திட்டங் களை மறுஆய்வு செய்யவும் குழு அங்கு சென்று உள்ளது.

பாதிப்படைந்த கிராமவாசி களின் முடங்கிக் கிடக்கும் தொழில்களை மீண்டும் உயர்ப் பிக்க மறுவாழ்வுத் திட்டங்கள் இலக்கு கொண்டுள்ளன. குறிப்பாக, வருமானத்துக்காக விவசாயத்தையும் சிறு தொழில் களையும் நம்பியிருப்பவர்களுக்கு உதவிக் கரம் நீட்டப்படும். எதிர்காலத்தில் பேரிடர்கள் நிகழ்ந்தால் அவற்றைச் மீள்திற னுடன் சமாளிப்பது எப்படி என்று கிராமவாசிகள் இத்திட்டங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வெள்ளத்தால் பாதிப்படைந்தவர் களுக்கு உதவ இம்மாதம் 31ஆம் தேதி வரையிலான 'மெர்சி ரிலீஃப்' நிதி திரட்டு இயக்கத் துக்கு பொதுமக்கள் தொடர்ந்து கடன் அட்டை, காசோலை, ரொக்கம் மூலமாக நன்கொடை வழங்கலாம்.

கடலூரில் பாதிப்படைந்தவர்களின் தேவைகளை மதிப்பீடு செய்யும் 'மெர்சி ரிலீஃப்' அமைப்பினர். படம்: மெர்சி ரிலீஃப்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!