சென்னை: வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அதிமுக கூட்டாகப் போட்டியிடும் என்ற ராம்தாஸ் அத்வாலே கூறிய கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும், மகாராஷ்டிர மாநிலத்தின் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும். திமுக அதிக கட்சிகளுடன் இணைந்து கூட்டணி வைக்கிறது.
"அதனால், தமிழக மக்களுக் காக ஜெயலலிதா கண்ட கனவுகளை நிறைவேற்ற தினகரன் அதிமுவுடன் இணைய வேண்டும். தினகரன் வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலை அதிமுகவோடு இணைந்து சந்திக்க வேண்டும். ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தது போன்று இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தொடர்பாக தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன். இணைந்த இரு அணிகளும் பாஜக கூட்டணியில் வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும்" என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "பாஜகவும் அதிமுகவும் மிகப் பெரிய இயக்கங்கள்.
கூட்டணி குறித்த முடிவுகளைக் கட்சித் தலைமையே அறிவிக்க வேண்டும். தனிப்பட்ட அமைச்சர் ஒருவர் சொல்வதை கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அது அவருடைய தனிப்பட்ட கருத்து," எனக் கூறினார்.
'பாஜகவுடன் அதிமுக கூட்டணி என்பது ராம்தாஸ் அத்வாலேயின் தனிப்பட்ட கருத்து'
24 Jan 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!