ராணுவப் பயிற்சியின்போது படுகாயமடைந்து விட்ட நடிகர் அலோய்ஷியஸ் பாங் இறந்து விட்ட செய்தி புதன்கிழமை இரவு வெளி யானதை அடுத்து பல அரசியல்வாதிகள், சமூக ஊடகங்களில் அனுதாபம் தெரிவித்து இருக்கிறார்கள்.
முதல் வகுப்பு கார்ப்பரல் (என்எஸ்) பாங் கின் குடும்பத்தார், அன்புக்குரியவர்களிடம், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் சுவிட்சர்லாந் தின் டாவோஸ் நகரிலிருந்து தனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
அமைச்சர் தற்போது உலகப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். இதனை அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டார்.
தற்காப்பு, வெளியுறவுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், அந்தச் சேவையாளரின் மரணம் அறிந்து தான் மிகவும் துயரமடைந்து விட்டதாக ஃபேஸ்புக் பக்கத்தில் கூறினார்.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் சேவையாளர் திரு பாங்கின் மரணத்திற்கு முன்னதாக புதன்கிழமை பல விவரங்களைத் தெரிவித் திருந்தார்.
அந்த நடிகரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்றும் நுரையீரல்கள், சிறுநீரகங்கள், இதயம் எல்லாவற்றுக்குமே செயற்கை ஆதரவுக் கருவி தேவைப்படுவதாக வும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டி ருந்தார்.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார்.
"நாட்டிற்குச் சேவையாற்றியபோது திரு பாங் உயிரிழந்து இருக்கிறார். உள்நாட்டுக் கலைஞரான அந்தச் சேவையாளரின் அர்ப் பணிப்பு உணர்வை என்றென்றும் நாம் நினை வில் வைத்திருப்போம்," என்று அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தச் சிரமமான நேரத்தை எதிர்நோக்கி இருக்கும் திரு பாங்கின் குடும்பத்தார், நண் பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் திருவாட்டி கிரேஸ் ஃபூ தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார்.
உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளுக் கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங், சிங்கப்பூர் போலிஸ் படையைச் சேர்ந்த முழுநேர தேசிய சேவையாளர்கள் சிலரை நேற்று சந்தித்தபோது தாம் அவர் களுடன் சேர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலி அனுசரித்ததாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரான சைனல் சப்பாரி தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்.
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரித்தம் சிங், ஃபேஸ்புக்கில் தம்மு டைய அனுதாபத்தைத் தெரிவித்திருந்தார். சிங்கப்பூர் மக்கள் கட்சியும் தன் அனுதாபத்தை அந்தச் சேவையாளரின் குடும்பத்திடம் தெரிவித்தது.
அலோய்ஷியஸ் பாங் மரணம்: அரசியல்வாதிகள் அனுதாபம்
25 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Jan 2019 07:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!