லாகூர்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி இரண்டாவது போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றியடைந்துள்ளது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடரைக் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சென்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்கள் சேர்த்தது.
பின்னர் 133 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகள் 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர்.
இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிந்தது. போட்டி 'டை' ஆனதால் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பந்தடித்தது. பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் பந்து வீசி வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டோட்டின் பந்தை எதிர்கொண்டார். நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் இமாலய சிக்சர்களை விளாசினார். வெஸ்ட் இண்டீஸ் 18 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தானின் அலியா ரியாஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் இராம் ஜாவித் ஓர் ஓட்டம் எடுத்தார். அடுத்த பந்தில் நிடா தார் ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்
3 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!