லண்டன்: மான்செஸ்டர் யுனை டெட்டின் இடைக்கால நிர்வாகி யாக முன்னாள் வீரர் ஒலே குனார் சோல்சியார் பொறுப் பேற்றதை அடுத்து, நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத் தில்தான் அக்குழு இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் தோல்வியைத் தழுவியது. ஆர்சனலை எதிர்கொண்ட யுனைடெட் 2=0 எனும் கோல் கணக்கில் தோற்றது.
இந்த ஆட்டம் ஆர்சனலின் விளையாட்டரங்கத்தில் நடை பெற்றது.
ஆட்டத்தின் 12வது நிமிடத் தில் ஸாக்கா அனுப்பிய பந்து வளைந்து சென்று வலையைத் தொட, ஆர்சனல் முன்னிலையைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து, இரு குழுக்களும் மாறி மாறி கோல் வேட்டையில் இறங்கின. யுனைடெட் எவ்வளவு முயன்றும் அதனால் கோல் போட முடியாமல் போனது.
அதற்கு ஆர்சனலின் தற்காப்பு விட்டுக்கொடுக்காமல் ஆடியதே முக்கிய காரணம்.
அதுமட்டுமல்லாது, யுனைடெட் டுக்கு கோல் போட கிடைத்த பொன்னான வாய்ப்புகளை ஆர்சனல் கோல்காப்பாளர் முறியடித்தார்.
மேலும் அதிர்ஷ்டமும் யுனை டெட்டுக்குக் கைகொடுக்க வில்லை. யுனைடெட்டின் இரண்டு கோல் முயற்சிகள் நூலிழையில் இலக்கைத் தவறின. பந்து இருமுறை கோல் கம்பம் மீது பட்டு வெளியானது குறிப் பிடத்தக்கது. இந்நிலையில், ஆட்டம் முடிய ஏறத்தாழ 21 நிமிடங்கள் எஞ்சி இருந்த வேளையில், ஆர்சன லுக்குப் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதை கோலாக்கி தமது குழுவின் வெற்றியை உறுதி செய்தார் ஒபமாயாங்.
லீக் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஆர்சனல் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவை நெருங்கியுள்ளது.
ஸ்பர்ஸ் குழுவைவிட அது வெறும் ஒரு புள்ளி குறைவாகப் பெற்றுள்ளது.
தடுத்து நிறுத்தப்பட்ட மான்செஸ்டர் யுனைடெட்
12 Mar 2019 09:17 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Mar 2019 09:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!