ஹைதராபாத்: மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமா ராவ் பற்றிய திரைப்படத்தை திரையிடுவதற்கு எந்த ஒரு தடையும் விதிக்கமுடியாது. அதை தாராளமாக வெளியிட லாம் என்று ஆந்திர உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 28ஆம் தேதி திரையிடப்பட உள்ள இப்படத் தின் காரணமாக ஆந்திர முதல் வர் சந்திரபாபு நாயுடு கலக்கம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11ல் தேர்தல் நடக்க உள்ளது. அத்துடன் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் அந்தப் படத் தால் தங்களது வெற்றி வாய்ப்பு கள் பாதிக்கப்படக் கூடும் என்ற பயத்தினால் படத்தை வெளி யிடக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை நேற்று விசா ரித்த உயர் நீதிமன்றம் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி அளித்துள்ளது.
ஆந்திர முன்னாள் முதல் வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்டிஆர் என்று அழைக்கப்படும் என்.டி.ராமா ராவின் வாழ்க்கை தொடர்பான சினிமாவை பிரபல பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா, 'லட்சுமியின் என்டிஆர்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத் துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் அண்மையில் வெளி யிடப்பட்டிருந்தது.
அதில் "துரோகம் செய்து விட்டனர், முதுகில் குத்திவிட்ட னர்," என என்டிஆர் கூறுவது போன்ற காட்சிகள் இருந்தன. அதையடுத்து இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தற்போது தேர்தல் நடக்க உள்ளதால் இப்படத்தை வெளி யிடுவதற்குத் தடை கோரி வழக்கு தொடரப்பட்டு இருந்தது. ஆனால், தடைவிதிக்க ஆந்திர நீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீதிமன்ற உத்தரவால் கலங்கி நிற்கும் சந்திரபாபு நாயுடு
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 11:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!