‘அம்மா அழைப்பு மையம்’ என்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு அறிவித் துள்ள 'அம்மா அழைப்பு மையம்' எனும் புதிய திட்டமானது மக்களை ஏமாற்றும் செயல் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களுக்காக உருப்படியாக எது வும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். "முதல்வர் ஜெயலலிதா இப் போது ஒரு புதிய திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கு 'அம்மா அழைப்பு மையம்' என்று பெயர் வைத்துள்ளார்.

இதற்கு அவர் தேர்ந்தெடுத்துள்ள தொலை பேசி எண் விசித்திரமாக உள் ளது. ஏற்கெனவே தமிழக சட்டப் பேரவையில் 110ஆவது விதியின் கீழ் அவர் அறிவித்த அறிவிப்புகள், திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. இப்போது 110த்துடன் மேலும் '0' சேர்த்து 1100 என்று அம்மா அழைப்பு மையத்துக்கு தொலைபேசி எண்ணை உரு வாக்கி உள்ளார்," என்றார் ஸ்டாலின்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மக்கள் மீது திடீர் அக்கறை வந்ததுபோல் இப்புதிய திட்டத்தை ஜெயலலிதா அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அம்மா அழைப்பு மையத்துக்கு லட்சக்கணக்கான புகார்கள் வரும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!