ஏவுகணை சோதனைக்கு ஆயத்தமாகும் வடகொரியா

தோக்கியோ: வடகொரியா வழக்கமாக ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் கிழக்கு கடலோரப் பகுதிக்கு அருகே ஏவுகணையை ஏந்திச்செல்லும் வாகனம் காணப்பட்டதால் நெடுந் தொலைவு ஏவுகணை சோத னைக்கு அந்நாடு தயாராகி வருவதாக ஜப்பானிய அரசாங்க வானொலித் தகவல் தெரிவித்தது. எந்த நேரத்திலும் அந்த சோதனையை வடகொரியா மேற் கொள்ளக்கூடும் என்றும் அத் தகவல் குறிப்பிட்டுள்ளது. திட்ட மிடப்பட்டுள்ள ஏவுகணை சோதனையை வடகொரியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வரு கின்றன.

வடகொரியா அதன் திட்டத்தை கைவிடவில்லை என்றால் அதற்குரிய கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் எச்சரித்துள்ள வேளையில் வடகொரியாவின் ஏவுகணையை ஏந்திச்செல்லும் வாகனம் வழக்கமாக நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் இல்லை என்று ஜப்பானிய வானொலித் தகவல் குறிப்பிட்டுள்ளது. ஆராய்ச்சிப் பணிகளுக்காக செயற்கைக்கோளை செலுத்தி சோதனை மேற்கொள்ளவிருப் பதாகவும் இதனால் கிழக்கு கடல் பகுதியில் கப்பல்கள் செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் ஐநா அமைப்புகளுக்கு வட கொரியா சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தது.

வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டால் அந்த ஏவுகணையை சுட்டுவீழ்த்தும் ஆற்றல் கொண்ட நவீன ஏவுகணையை ஏந்திச்செல்லும் ஜப்பானியக் கப்பல் ஒகினாவா பகுதிக்குச் செல்கிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!