30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி

தெம்ப­னிஸ் தொடக்­கக்­கல்­லூரி தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டா­டு­கிறது. ஓராண்­டுக்­குத் தொடரும் கொண்டாட்­டங்களின் தொடக்க விழா நேற்று நடை­ பெற்­றது. நேற்றைய நிகழ்ச்­சி­யில் மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், பெற்றோர், கல்லூரி­யு­டன் தொடர்­புடைய பலரின் பங்­கேற்பில் மூன்று கிலோ­மீட்­டர் தொலை­வுக்­கான குழு நடை மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாண்டு ஜூன் மாதத்­துக் ­குள் கல்லூரியைச் சேர்ந்த பங்­கேற்­பா­ளர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் 300 கிலோ­மீட்­டர் தொலைவைக் கடக்­கத் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

கல்லூரியைச் சேர்ந்த பலரும் மொத்தம் 100,000 கி.மீ. தூரத்தைக் கடக்­கும் சவாலும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இந்தச் சவாலை முடிப்­ப­தன் வழி­யா­கத் திரட்­டப்­படும் $60,000 நிதி வட­கிழக்கு வட்­டா­ரத்­தில் இருக்­கும் வசதி குறைந்­தோ­ருக்­காக உண வுப் பொருட்­கள் வாங்­கு­வதற்கு வழங்கப்­படும் என அக்கல்லூரியின் முதல்­வர் பேமலா யூங் தெரி­ வித்­தார். வயதான மூத்தோர் வசிக்­கும் 'மாரல் ஹோம்'ஐச் சேர்ந்த குடி ­யி­ருப்­பா­ளர்­களுக்கு உதவியும் வழங்கப்­பட்­டது.

எதிர்­வ­ரும் சீனப்­புத்­தாண்­டுக் கொண்டாட்­டங்களு­டன் கல்லூரி­யில் கொண்டாட்­டச் சூழலை ஏற்­படுத்­தும் நோக்கில் நடத்­தப்­பட்ட 'லோ=ஹெய்'யில் பல இன மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள் பங்­கேற்­ற­னர்.
படம்: தெம்பனிஸ் தொடக்கக் கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!