உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாக சிங்கப்பூர்

உலகின் பாது­காப்­பான நக­ரங்களுள் ஒன்றாக சிங்கப்­பூர் தொடர்ந்து இருப்­ப­தாக உள்துறை அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. சிங்கப்­பூ­ரின் சட்டம், ஒழுங்கு தொடர்ந்து சாத­க­மான நிலையில் இருந்து வரு­வ­தாக 2015ஆம் ஆண்டில் சிங்கப்­பூ­ரின் பாது­காப்பு, இடர்­காப்­புச் சூழ்நிலை குறித்து நேற்று வெளி­யி­டப்­பட்ட உள்துறை அமைச்­சின் அறிக்கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு முந்தைய ஆண்டை­ வி­டக் கடந்த ஆண்டில் குற்­றங்களின் எண்­ணிக்கை சற்று அதி­க­ரித்­தி­ருந்தா­லும் இணை யக் குற்­றங்கள் தவிர மற்றவை குறைந்­துள்­ளன. 2013ஆம் ஆண்டு முதல் இணையக் குற்­றங்கள் அதி க­ரித்து வரு­கின்றன.

எடுத்­துக்­காட்­டாக, வீட்டை உடைத்துத் திரு­டு­வது தொடர்­பான குற்­றங்கள் கடந்த 20 ஆண்­டு­களில் ஆகக் குறைந்த அளவாக கடந்த ஆண்டில் பதி­வா­கி­யுள்­ளன. அதேபோல, உரிமம் இன்றி கடன் தரு­வோ­ருடைய அச்­சு­றுத்­தல் வழக்­கு ­களும் குறைந்து வரு­கின்றன. போதைப்­பொ­ருள் பயன்­பாட்­டில் அதிக மாற்­ற­மில்லை. தீ விபத்­து­கள் குறைந்­துள்­ளன. தீச்­சம்ப­வங்க­ளால் ஏற்­படும் மர­ணங்களும் தொடர்ந்து குறைந்த அள­வி­லேயே உள்ளன. சாலைப் போக்­கு­வ­ரத்து விபத்­து­களினால் காய­மு­று­வோர் எண்­ணிக்கை சற்று அதி­க­ரித்­ தி­ருந்தா­லும் விபத்­து­க­ளால் மர­ண­மடை­வோர் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது.

பயங்கரவாதியைக் கைதுசெய்யும் பாவனைப்பயிற்சி. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!