விலங்கியல் தோட்டத்தில் அறிமுகம் காணும் புதிய ‘ஆ மெங்’

சிங்கப்­பூர் விலங்­கி­யல் தோட்டத்தின் 'தூதராக' முன்பு விளங்கிய 'ஆ மெங்' மனிதக் குரங் குக்குப் பதிலாக புதிய 'ஆ மெங்' அறி­மு­கப்­படுத்­தப்­படும் என்று சிங்கப்­பூர் வனவி­லங்கு காப்­ப­கம் அறி­வித்­துள்­ளது. 'அந்தப் பெண் மனிதக் குரங்கு எது' என்பது பிப்­ர­வரி 27, 28ஆம் தேதி­களில் நடைபெறும் 'சஃபாரி ஸ`' ஓட்ட நிகழ்­வின்­போது அறி­விக்­கப்­படும். அந்தக் குரங்கு 'ஆ மெங்'கின் வம்­சா­வ­ளியைச் சேர்ந்தது என்றும் அதன் ஆறு பிள்ளை­கள், பேரப்­பிள்ளை­கள் ஆகி­ய­வற்­றில் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்­படும் என்றும் காப்­ப­கம் தெரி­வித்­தது.

விலங்­கி­யல் தோட்­டத்­தின் முன்னைய பிர­ப­ல­மான 'ஆ மெங்' மனிதக் குரங்கு 2008ஆம் ஆண்டு பிப்­ர­வரி 8ஆம் தேதியன்று மர­ண­மடைந்தது. அப்போது அதற்கு வயது 48. அப்படி என்றால் மனித வயதில் அது 95. 'சஃபாரி ஸ` ஓட்டம்' என்பது ஆ மெங்கின் மறை­வுக்­குப் பிறகு அதன் நினைவாக 2009ஆம் ஆண்டில் தொடங்கப்­பட்­டது.

முன்னைய 'ஆ மெங்' போல புதிய 'ஆ மெங்', விலங்­கி­யல் தோட்­டத்­தின் பெயரைக் கட்டிக் காக்க வேண்டும். முன்னைய 'ஆ மெங்' சுற்­றுப்­ப­யண நட்­சத்­திர மாக விளங்­கி­ய­தால் அனைத் துலக திரைப்­பட பிர­ப­லங்கள், அரச குடும்பத்­தி­னர் போன்றோ ருடன் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்டது. 1982ல் தொடங்கப்­பட்ட 'பிரேக்­ஃ­பஸ்ட் வித் ஆ மெங்' திட்டம் மூலம் பிர­ப­ல­மடைந்த அந்த மனிதக் குரங்கு சுமார் 30 திரைப்படங்களி­லும் 270 கட்­டுரை­களிலும் இடம்­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது. 2016-01-10 06:00:00 +0800

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!