சிரியா: விமானத் தாக்குதலில் மருத்துவமனை கடும் சேதம்

பெய்ரூட்: வடமேற்கு சிரியாவில் ஒரு மருத்துவமனை வான்வெளித் தாக்குதலுக்குள்ளானதில் அந்தக் கட்டடம் இடிந்து நாசமானது. மருத்துவமனை ஊழியர்கள் எண்மரைக் காணவில்லை என்று அஞ்சப்படும் நிலையில் அந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்று இன்னும் தெரியவில்லை. குறைந்தது ஒன்பது பேர் இறந்தனர் என்றும் ரஷ்ய விமானம் அந்தப் பகுதியில் காணப்பட்டது என்றும் ஒரு கண்காணிப்புக் குழு கூறியது. பிப்­ர­வரி மாதம் சிரி­யா­வில் தீவிர­மடைந்த சண்டை­யில் மட்டும் குறைந்தது 500 பேர் உயி­ரி­ழந்­து உள்­ள­னர். ஐந்தாண்­டுப் போரில் 260,000க்கும் அதி­க­மா­னோர் மாண்ட­னர்.

இதற்கிடையே, குர்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் துருக்கியின் மேல் நடவடிக்கை எடுக்க சிரியா ஐநாவின் பாது காப்பு மன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. அல் கொய்தா பயங்கரவாதி களுக்கு ஆதரவு அளிக்கும் துருக்கியின் தாக்குதல் தன் னுடைய இறையாண்மைக்கு எதி ரான செயல் என்பதால் அதனை எதிர்க்க தனக்கு உரிமையுண்டு என்றது சிரியா. வடக்கு அலெப்போவில் முன்னேறிய குர்தியப் படைகள் மீது துருக்கி நேற்று முன்தினம் இரண்டாது நாளாகத் தாக்குதல் நடத்தியது. அப்பகுதிகளில் ஏற்கெனவே ரஷ்யப் படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சிரியாவில் சண்டையிடும் குர்தியப் போராளிகளை துருக்கி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. அமெரிக்காவும் பிற நாடுகளும் குர்தியப் படைகளுக்கு ஆதரவு தந்து வருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!