ரஷ்யா மீது பிரான்ஸ், துருக்கி குற்றச்சாட்டு

டமாஸ்கஸ்: சிரியாவின் வடக்கே மருத்துவமனை மீது நடத்தப்பட்ட ஆகாயத் தாக்குதல் போர்க் குற்றமாகும் என்று பிரான்சும் துருக்கியும் கூறியிருக்கின்றன. அந்த வட்டாரத்தில் உள்ள பள்ளி, மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 50 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று ஐநா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பிரான்சும் துருக்கியும் அது ஒரு போர்க் குற்றம் என்று குற்றம் சாட்டி யிருக்கின்றன. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என்று துருக்கி வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கிடையே சிரியா அதிபர் பஷார் அல்=ஆசாத் சிரியாவில் போர் நிறுத்தம் குறித்து சந்தேகம் எழுப்பியிருக்கிறார். கடந்த வாரம் உலக நாடுகள் ஒன்றுகூடி சிரியாவில் போரை முடிவுக்கு கொண்டு வரும் திட்டத்தை அறிவித்தன. ஆனால் இதில் சிரியா அரசாங்கமோ, கலகப்படையினரோ நேரடியாக பங்கேற்கவில்லை.

ஆகாயத் தாக்குதலில் பலியான குழந்தை. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!