‘முன்னோடிகளின் பண்புகள் நமக்கு படிப்பினை’

வீ. பழனிச்சாமி

'முன்னோடிகளின் பண்புகள் நமக்கு படிப்பினை' திறமையான விளையாட்டு வீர ராக, முன்னோடிப் பொறியாளராக, சமூகத் தலைவராக, தலைசிறந்த குடிமகனாக டாக்டர் ஆ. விஜய ரத்னத்தின் சாதனைகள் அனை வரும் அறிந்ததே. இவர் போன்ற வரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உள்ளன என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள் ளார். சிங்கப்பூரின் முதல் உள்ளூர் பொறியாளராகத் திகழ்ந்த டாக் டர் விஜயரத்னம் கடந்த வியாழக் கிழமை காலை தமது இல்லத்தில் உயிர் நீத்தார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த திரு தர்மன் தமது துணைவியாருடன் மேரிலேண்ட் டிரைவில் உள்ள அவரது இல்லத் துக்கு நேற்று முன்தினம் இரவு 9.20 மணிக்கு வருகை அளித் தார். டாக்டர் விஜய்யின் நல்லுட லுக்கு மலர் தூவி இறுதி அஞ் சலி செலுத்தி விட்டு, திரு தர்மன் அவரது பிள்ளைகளிடம் பேசினார்.

பின்னர் தமிழ் முரசிடம் பேசிய துணைப் பிரதமர், "நமது முன்னோடித் தலைமுறையினர் எதுவுமே எளிதில் கைகூடாத காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் இதுதான் கிடைக் கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத காலம் அது. "அப்படி இருந்தும் அவர்கள் பேரார்வத்துடன் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள். தங்களி டம் உள்ள திறமை, கடும் உழைப்பு ஆகியவற்றை மூலதன மாக வைத்து அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொண்டு, பின்னர் மனைவியைப் பராமரித்தும் பிள்ளைகளை வளர்த்தும் வாழ்க்கை யைத் தொடர்ந்திருக்கின்றனர்," என்றார்.

நேற்று முன்தினம் இரவு அமரர் டாக்டர் விஜயரத்னத்தின் இல்லத்துக்கு வந்து அவரது நல்லுடலுக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (வலது). அவருக்குப் பக்கத்தில் டாக்டர் விஜய்யின் மூன்றாவது மகள் வனஜா (இடமிருந்து 2வது) திருமதி தர்மன், மூத்த மகள் டாக்டர் ரஜினி (மறைக்கப்பட்டுள்ளார்), இரண்டாவது மகள் ‌ஷியாமளா, ஒரே பதல்வர் விஜயேந்திரன். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!