‘எண்ணத்தில் மாற்றமில்லை’

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தில் தமது கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங்

 

தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தில் தமது கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்று பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார். தொகுதியில்லா உறுப்பினர் திட்டத்தை ஏற்றுக் கொள்கிறதா என்பதை பாட்டாளிக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் முன்னதாக கேட்டிருந்தார். இந்தத் திட்டத்தை பாட்டாளிக் கட்சி எதிர்த்தாலும் தொகுதியில்லா உறுப்பினர் பதவி வழங்கப்பட்டபோது அக்கட்சி ஏற்றுக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் அந்தத் திட்டத்தில் பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடு மாறவில்லை என்று பிரித்தம் சிங் விளக்கம் அளித்துள்ளார்.