ஏழு நாட்களில் 232 பேருக்கு டெங்கி

சிங்கப்பூரில் ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்த ஒருவார காலத்தில் புதிதாக 232 பேருக்கு டெங்கி காய்ச்சல் கண்டது. இந்த எண் ணிக்கை அதற்கு முந்திய வார எண்ணிக்கையைவிட எட்டு அதிகமாகும். தேசிய சுற்றுப்புற வாரியத்தின் டெங்கி இணையத் தளத்தில் இடம்பெற்றுள்ள ஆகப் புதிய புள்ளி விவரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன. ஏப்ரல் 24 ஆம் தேதிக்கும் ஏப்ரல் 25 பிற்பகல் 3.30 மணிக்கும் இடையில் புதிதாக 34 பேருக்கு இந்தக் காய்ச் சல் ஏற்பட்டது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்தம் 7,085 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரையில் நால்வர் மரணம் அடைந்திருக்கிறார்கள். டெங்கி காய்ச்சலால் இந்த ஆண்டில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 30,000த்தைத் தாண் டும் என்று சுகாதார அமைச்சும் இந்த வாரியமும் எச்சரித்துள்ளன. எல்நினோ பருவநிலை காரணமாக வெப்பம் அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!