புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை, சிங்கப்பூரில் பரிசோதனை

உல­கி­லேயே முதல் முறையாக புதிய புற்­று­நோய் சிகிச்சை முறை ஒன்று சிங்கப்­பூ­ரில் பரி­சோ­திக்­கப்­படு­கிறது. மார்­ப­கப் புற்­று­நோ­யால் அவ­தி­யு­றும் பெண்­களுக்கு இந்த சிகிச்சை நம்­பிக்கை தரக்­கூடும்.

இந்த பரி­சோ­தனைச் சிகிச் சைக்கு உட்­பட்­ட­வர்­களில் திரு­வாட்டி கோவும் ஒருவர். 1999ஆம் ஆண்டு 39 வயதில் மார்­ப­கப் புற்­று­நோய் அவ­ருக்கு ஏற்­பட்­டது. அப்போது அவர் சிகிச்சை மேற்­கொண்டு நல­ம் அடைந்தார். 2011ஆம் ஆண்டு மீண்டும் அவ­ருக்கு புற்­று­நோய் திரும்­பி­ய­து­டன் அது, ஈரல், சுவாசப் பை என உடல் முழுக்­கப் பர­வி­யது.

தேசிய புற்­று­நோய் நிலை­யத்­தில் மேற்­கொண்ட சிகிச்சை­கள் பல­ன­ளிக்­காத நிலையில், தேசிய பல்­கலைக்­க­ழக புற்­று­நோ­ய் கழ­கத்­தில் மேற்­கொள்­ளப்­படும் சோதனை முறை சிகிச்சைக்கு அவரது மருத்­து­வர்­கள் அவரைப் பரிந்­துரைத்த­னர்.

பரிசோ­தனை முறை சிகிச்சை­யில் மருத்­து­வர்­கள் உடலின் இயற்கை­யாக அழிக்­கும் அணுக்­களைப் (கில்லர் செல்ஸ்) பயன்படுத்தி, மார்­ப­கப் புற்­று­நோ­யின் கடை­சி ­கட்ட வளர்ச்­சியைத் தடுத்­ த­னர். தற்போது தமக்கு பசி­யெ­டுக்­கிறது என்றும் வழமை­யான நிலைக்­குத் திரும்­பி­யுள்­ள­ தா­க­வும் திரு­வாட்டி கோ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறினார்.2016-07-04 11:05:00 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!