‘வட்டார வேளாண் துறைக்கு உரமாக சிங்கப்பூர் திகழலாம்’

சிங்கப்பூரின் வேளாண்மைத் துறை மிகவும் சிறியது என்றாலும் இந்த வட்டார உணவுப் பாது காப்பிற்கு சிங்கப்பூர் தொண் டாற்ற முடியும் என்று போக்கு வரத்து அமைச்சரும் உள் கட்டமைப்புக்கான ஒருங் கிணைப்பு அமைச்சருமான கோ பூன் வான் தெரிவித்திருக்கிறார். ஆசியான் வேளாண்மை, காட்டுவளத் துறை அமைச்சர் களின் 38வது கூட்டத்தை தொடங்கிவைத்து நேற்று அவர் பேசினார். அந்தக் கூட்டத்தைச் சிங்கப்பூர் ஏற்று நடத்தியது. ஆசியான் அமைச்சர்களுடன் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளும் கலந்துகொள் ளும் கூட்டத்தொடரில் 16வது கூட்டமாகவும் அது இருந்தது. “சிங்கப்பூரில் வேளாண்மைத் துறை என்பது மிகமிகச் சிறியது. இருந்தாலும் உணவுத் துறை பாது காப்பில் நாம் நம் பங்கை ஆற்ற லாம், தொண்டு செய்யலாம்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் வேளாண்மைத் துறையை மிகவும் உற்பத்தித் திறன் வாய்ந்ததாகவும் மீட்சித் தன்மைமிக்கதாகவும் ஆக்கு வதற்கு அரசாங்கம் உதவி செய்து வருவதை திரு கோ சுட்டிக் காட்டினார்.

வழக்கமான பண்ணை முறைக் குப் பதிலாக செங்குத்துப் பண்ணை முறைகளை சிங்கப்பூர் உருவாக்கி வருகிறது. இதன் மூலம் ஐந்து மடங்கு அதிக காய்கறிகளைப் பயிரிட முடியும் என்பதை அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் எதிர்கால வேளாண்மைப் பண்ணைகள் அதிக தொழில்நுட்பத்தோடும் புத்தாக்கம், உற்பத்தித்திறன் மிக்கதாகவும் மிகவும் தீவிர மானதாகவும் இருக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்கு என்று அமைச்சர் தெரிவித்தார். தாவர உற்பத்தி தொடர்பான புதிய தொழில்நுட்பங்களைச் சோதித்துப் பார்ப்பதற்கு உதவும் ஒரு சோதனைக்கூடமாகத் திகழ சிங்கப்பூருக்குப் பல வாய்ப்புகள் இருப்பதாகவும் திரு கோ குறிப் பிட்டார். ஆசியானில் அங்கம் வகிக் கும் நாடுகளைப் பொறுத்தவரை யில் பொருளியல் வளர்ச்சிக்கு உதவும் முக்கியமான இயந்திரமாக இருப்பது வேளாண் துறையே. உலகில் ஆக அதிகமாக வேளாண்மைப் பொருட்களை உற்பத்திச் செய்யும் வட்டாரமாக ஆசியான் திகழ்கிறது.

அரிசி ஏற்றுமதியைப் பார்க்கையில் உலகின் மாபெரும் அரிசி ஏற்றுமதியாளர்களில் சிலர் ஆசி யானில் இருக்கிறார்கள். இந்த வட்டாரத்தின் உணவுப் பாதுகாப்பு என்பது ஒவ்வொரு நாடும் அதிக உற்பத்தித்திறனோடும் அதிக மீட்சித்திறனோடும் இருந்து கொள்ளவேண்டியதைப் பொறுத்தே இருக்கும் என்பதால் இது பருவ நிலை மாற்றம் போன்ற நிச்சய மில்லாத நிலைகள் காரணமாக ஒரு சவாலாகவே இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். உணவுப் பாதுகாப்பு ஒருபுறம் இருக்க, வேளாண்மையில் பாக்டீரியா, பூஞ்சைகள் போன்ற உயிரினங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் நாம் சமாளிக்க வேண்டிய மற்றொரு பிரச்சினை என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினையைச் சமா ளிக்கும் முயற்சியாக சிங்கப்பூர் வட்டார பரிசோதனைச்சாலை ஒன்றை அமைப்பதில் ஒருமித்த கவனம் செலுத்தலாம் என்று திரு கோ குறிப்பிட்டார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தலையை வேனில் மோதியதால் குழந்தை இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. படம்: ஃபேஸ்புக்

12 Nov 2019

தலையை காரில் மோதியதில் குழந்தை உயிரிழப்பு; தாயின் ஆண் நண்பர்மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர் நாணய ஆணைய பசுமை செயல்திட்டத்தின் பல புதிய முயற்சிகளை நேற்று தொடங்கி வைத்துப் பேசினார் கல்வி அமைச்சர் ஓங் யி காங் . படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

பருவநிலை பசுமை திட்டங்களுக்கு US$2 பில்லியன் முதலீடு

கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய மின்சாரப் பேருந்துகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

12 Nov 2019

அடுத்த ஆண்டு துவக்கத்திலிருந்து 60 மின்சாரப் பேருந்துகள்