மருத்துவச் சோதனை: பாதிப் பேருக்கு தீரா நோய்

சிங்கப்­பூ­ரில் சென்ற ஆண்டு நடத்­தப்­பட்ட பொது உடல்­நலப் பரி­சோ­தனை­களில் பங்­கேற்­ற­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேருக்கு தீரா நோய் வரக்­கூ­டிய அபாயம் இருப்­பது கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது. இந்த ஆண்டின் சுகாதார பரி­சோ­தனைத் திட்­டத்­தில் பங்­கேற்ற சுகா­தா­ரத்­ துணை அமைச்சர் லாம் பின் மின், “கடந்த ஆண்டில் 46 விழுக்­காட்­டி­ன­ருக்கு குறைந்தது ஒரு தீரா நோய் இருப்­ப­தற்­கான அறி­கு­றிகள் தென்­ பட்­டன,” என்று தெரி­வித்­தார். “இது அதி­க­மான நோய் விகிதம். எனினும், உடல் ஆரோக்­கி­யத்தைக் கட்­டுக்­குள் கொண்டு வர முதல் அடிதான் பரிசோதனை,” என்றும் அவர் சுட்­டினார்.

‘தேசிய பல்­கலைக்­க­ழக யோங் லூ லின் மருத்­து­வக் கல்­லூ­ரி­யின் பொதுச் சுகாதாரச் சேவை’ என்ற ஆண்டு உடல்­நலப் பரி­சோ­தனை நிகழ்ச்­சியை 11வது ஆண்டாக தேசிய பல்­கலைக்­க­ழக மருத்­துவத் துறை மாண­வர்­கள் நடத் ­தி­னர். கிளமெண்டி அவென்யூ 3ல் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் இந்தப் பொது உடல்­நலப் பரி­சோ­தனை நடை­பெ­று­கிறது. 40 வயதும் அதற்கு மேற்­பட்ட சிங்கப்­பூ­ரர்­களும் நிரந்த­ர­வா­சி­களும் இதில் கலந்­து­கொள்­ள­லாம்.

பொது உடல்­நல பரி­சோ­தனை­ நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருடன் உரையாடுகிறார் சுகா­தா­ரத் துணை அமைச்சர் லாம் பின் மின் (இடது). படம்: என்யுஎச்எஸ்