கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஆடவருக்கு சிறை, பிரம்படி

முதியவர் ஒருவரிடமிருந்து பணம் பறிக்கும் முயற்சியில் இறங்கியதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 44 வயது அப்துல் ஃபட்டாஹ் ஸஹித் எனும் முன்னாள் புகைப்படக்கா ரருக்கு ஈராண்டு, மூன்று மாதச் சிறைத் தண்டனையும் ஆறு பிரம் படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி 59 வயது திரு லாம் பாக் யுவனைத் தாக்கிய அவர், பணத்தைப் பறிக்க முடியாமல் தப்பி ஓடியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அன்று காலை 9 மணிக்கு திரு லாம் தமது வங்கிக் கணக் கிலிருந்து $10,000 ரொக்கம் எடுக்க தெம்பனிஸ் ஸ்திரீட் 11ல் உள்ள மேபேங்க் கிளைக்குச் சென்றிருந்தார். சுமார் 40 நிமிடங்கள் கழித்து வங்கிக்குள் நுழைந்த அப்துல் ஃபட்டாஹ், சேவை அனுமதிச் சீட்டைப் பெற்ற பிறகு காத்திருக் கும் இடத்தில் அமர்ந்தார். வங்கிக் காசாளரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட திரு லாம் அதைத் தமது காற்சட்டை பைக்குள் வைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!