1 கிலோ போதைப்பொருளுடன் மலேசிய ஆடவர் பிடிபட்டார்

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி யில் சனிக்கிழமையன்று 30 வயது மலேசியர் ஒருவரின் மோட்டார்சைக்கிளில் 1.38 கிலோ ஹெராயின் போதைப் பொருள் காணப்பட்டதை அடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையமும் நேற்று கூட்டு அறிக்கையில் இதனைத் தெரிவித்தன. மலேசியாவில் பதிவு செய்யப் பட்ட மோட்டார்சைக்கிளில் வந்த அந்த ஆடவரை சோதனைச்சாவடி அதிகாரி ஒருவர் கூடுதல் சோத னைக்கு அனுப்பியதாகவும் அவ ரைச் சோதித்தபோது மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழே கருப்பு நிறத்தில் நான்கு பொட்ட லங்கள் இருந்ததாகவும் தெரிவிக் கப்பட்டது. பிறகு மேலும் நடந்த புலன்விசாரணையின் மூலம் அந்தப் பொட்டலங்களில் சுமார் 1.38 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!