சிங்கப்பூர் தொடர் சாதனை: தலைசிறந்த கடல்துறை தலைநகரம்

சிங்கப்பூர் மூன்றாவது தடவை யாக உலகின் தலைசிறந்த கடல் துறை தலைநகரம் என்று பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நார்வே நாட்டின் ஆலோசனை நிறுவனமான ‘மேனோன் எக்னா மிக்ஸ்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு இவ்வாறு முடிவு செய் திருக்கிறது. உலகின் எல்லா கண்டங் களையும் சேர்ந்த 250 பேருக்கும் அதிக தொழில்துறை வல்லுநர் களிடமிருந்து கருத்துகளைத் திரட்டியும் 24 அம்சங்களை அடிப் படையாக வைத்தும் இந்த நிறு வனம் நடத்திய ஆய்வு சிங்கப்பூரை உலகின் கடல்துறை தலைநகரம் என்று வகைப்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனம் 2015, 2012 ஆம் ஆண்டுகளில் நடத்திய ஆய்வுகளிலும் சிங்கப்பூரே முதலி டம் பெற்றது. சிங்கப்பூர் மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றது. கப்பல் போக்குவரத்து, துறைமுகம் மற்றும் தளவாடப் போக்குவரத்து, கவர்ச்சி, போட்டித்திறன் ஆகி யவை அந்த மூன்று பிரிவுகள். எஞ்சிய இரண்டு துறைகளி லும் சிங்கப்பூர் சிறப்பாக செயல் பட்டிருப்பதாக மேனோன் எக்னா மிக்ஸ் கூறுகிறது. கடல்துறைத் தொழில்நுட்பத் தில் இரண்டாவது இடத்தையும் நிதி மற்றும் சட்டத் துறையில் நான்காவது இடத்திலும் சிங்கப்பூர் இருக்கிறது.