உயர்கல்விக்கு உதவிக்கரம்

ப. பாலசுப்பிரமணியம்

வழக்கநிலை தேர்வுக்குப் பின் தொழில்நுட்பக் கல்விக் கழ கத்தில் ச. யுகனேஸ்வரி சேர்ந்த போது, சுற்றி இருந்தவர்கள் பல ரும் அவரை தாழ்வு மனப்பான்மை யுடன் பார்த்ததை யுகனேஸ்வரி நினைவுகூர்ந்தார். பட்டதாரியாக சாதித்துக் காட்டுவேன் என்ற வைராக்கியமும் தன் கல்வி பய ணத்திற்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய கல்வி உப காரச் சம்பளமும் அவரது முன் னேற்றத்திற்கு வழி வகுத்தது. சீமெய் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதியர் துறையில் தன் படிப்பைத் தொடங்கி, நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரிக்கு முன்னேறி இன்று அதே துறையில் சிங்கப்பூர் தொழில்நுட்பக்கழகத் தில் இளநிலை கல்வி மேற்கொள்ளவுள்ளார் 22 வயது யுகனேஸ்வரி.

ராபிள்ஸ் டவுன் கிளப்பில் நேற்று நடந்த ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய கல்வி உதவி நிதி அறிமுகத் தையும் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய உபகாரச் சம்பள 10ஆம் ஆண்டு நிறை வையும் குறிக்கும் விருது நிகழ்ச்சியில் விருது பெற்றவர் களில் இவ ரும் ஒருவர். 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய உபகாரச் சம்பள விருதுகள் மூலம் இதுவரை 238 உயர்கல்வி பயிலும் மாணவர் களுக்குப் பயனளித்துள்ளன. தொழில் நுட்பக் கல்வி முதல் பலதுறைத் தொழிற்கல்லூரி வரை பலரும் தொடர்ந்து இந்த நிதி ஆதரவு பெற்று அவற்றில் சிலர் பல்கலைக் கழகத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

(இடமிருந்து) ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் திரு பி.சிவராமன், மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டெனிஸ் புவா, கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெறும் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தொழில்துறை, செயல்முறை நிர்வாகத் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் மகேஸ்வரன் சுகுமாறன். படம்: ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!