மின்சார மறுவிற்பனை வர்த்தகத்தில் சிங்டெல்

‘ஒய்டிஎல் பவர்செராயா’வின் ஒருங்கிணைந்த எரிசக்தி மின் சார நிறுவனமான கெனெக்கோவு டன் செய்துகொண்ட ஒத்துழைப் பால் சிங்டெல் நிறுவனம் மறு விற்பனை வர்த்தகச் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளது. அந்த எரிசக்தி, ‘சிங்டெல் பவர்’ நிறுவனத்தின் மூலம் மறு விற்பனை செய்யப்படும். இதன் மூலம் மின்சாரத்தைப் பயன்படுத்துவோர் தங்கள் கட்ட ணத்திலிருந்து 30 விழுக்காடு வரை சேமிக்கலாம் என்றும் தற் போதுள்ள நிறுவனத்திடமிருந்து சிங்டெல் மின்சாரத்துக்கு மாறு வதும் எவ்வித சிரமமின்றி வழங் கப்படும் என்றும் சிங்டெல், கெனெக்கோ நிறுவனங்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது. “சிங்டெல் பவர் மூலம் சிங்கப் பூர் குடும்பங்களுக்கு மேம்பட்ட மதிப்பு, தெரிவு, நீக்குப்போக்குத் தன்மை ஆகியவற்றை வழங்க விரும்புகிறோம்,” என்றார் சிங்கப் பூர் சிங்டெல் பயனீட்டாளர் பிரி வின் தலைமை நிர்வாகி திரு யுவென் குவான் மூன்.