தாயாரைத் தாக்கியவருக்குக்  கட்டாய சிகிச்சை உத்தரவு 

மனச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ள டான் ஹியாங் கியாம், 53, தனக்கு எரிச்சலூட்டிய தாயாரை ஆத்திரத்தில் தாக்கியதில் மூதாட்டிக்கு விலா எலும்பு முறிவும் காயங்களும் ஏற்பட்டன. இதன் தொடர்பில் மனநோயைக் குணப்படுத்த டானுக்கு ஓராண்டு ஆறு மாதங்களுக்கு கட்டாய சிகிச்சை உத்தரவு இடப்பட்டுள்ளது.
திருவாட்டி போ சுவீ கியாவைத் தாக்கிய குற்றச்சாட்டைச் சென்ற மாதம் டான் ஒப்புக்கொண்டதை அடுத்து நேற்று சிறைத் தண்டனைக்குப் பதிலாக நீதிமன்றம் கட்டாய சிகிச்சைக்கு உத்தரவிட்டது.