அரசாங்க அமைப்புகளின் மறைச்சொற்கள் இணையத்தில் விற்கப்பட்டு வருகின்றன: ரஷ்ய நிறுவனம்

அரசாங்க அமைப்புகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட தகவல்கள், வங்கிகளைச் சேர்ந்த 19,000 கட்டண அட்டைகள் ஆகியவை ஊடுருவிகளால் இணையத்தில் விற்கப்பட்டு வருகின்றன. 

அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, சிங்கப்பூர் போலிஸ் படை, தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றின் இணையத்தள மறைச்சொற்கள், சில அந்தரங்க இணையத்தளங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனைக்கு விடப்பட்டிருந்ததாக ரஷ்யாவைச் சேர்ந்த ‘க்ரூப்-ஐபி’ என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தெரிவித்தது.

600,000 வெள்ளிக்கும் அதிகமான மதிப்பைக் கொண்டுள்ள அந்த 19,000 கட்டண அட்டைகள் கடந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக ‘க்ரூப்-ஐபி’யின் செய்தியாளர் அறிக்கை குறிப்பிடுகிறது. இது தொடர்பான தகவல்கள் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பிடம் இவ்வாண்டு ஜனவரி தெரிவிக்கப்பட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்தது.