இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய மணவிழா

ஆண்டுதோறும் ஜூலை 21ஆம் தேதி சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1964ஆம் ஆண்டின் இதே நாளில்தான் சிங்கப்பூரில் இனக் கலவரம் வெடித்தது. அதை நினைவுகூர்ந்து, இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் விதமாக பள்ளிகளும் அடித்தள அமைப்புகளும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றன.

சிங்கப்பூரின் பல பள்ளிகளிலும் நேற்று இன நல்லிணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அவ்வகையில், சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கொண்டாட்டத்தில் இந்திய,இந்து சமய முறைப்படி நடைபெற்ற 'மாதிரி திருமணத்தில்' இந்திய மணமகளும் சீன மணமகனும் மாலை மாற்றிக்கொண்டனர். கல்வி அமைச்சர் ஓங் யி காங் (இடது) இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். 

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்