சம்பளப் பாக்கி: நியூசிலாந்து ஆடவருக்கு அபராதம்

கிவி பழம் பறித்து தரம் பிரிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நான்கு சிங்கப்பூர் பெண்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை என்று புகார் செய்யப்பட்டு இருந்தது.

நியூசிலாந்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் கௌதம் ராஜன் கபூர் என்னும் ஆடவருக்கு வேலை தொடர்பான விதிமீறல்களுக்காக 18,000 நியூசிலாந்து டாலர் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து நான்கு பெண்களுக்குரிய சம்பளத் தொகையாக 12,000 டாலர் பிரித்துக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ‘நியூ பேப்பர்’ செய்தி வெளியிட்டுள்ளது.