விதிமீறல்: 89 வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து

விதிமீறல்: 89 வேலை அனுமதிச் சீட்டுகள் ரத்து

1 mins read
99eab2f2-0fc8-4db0-b9cb-ebad574a1fae
ஊழியர்கள் பணியாற்றி நிறுவனங்கள் விதிமுறைகளை ஊழியர்கள் முறையாகப் பின்பற்றுவதைக் கண்காணிக்காததால் ஒன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேலை அனுமதிச் சீட்டு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நேற்­றைய நில­வ­ரப்­படி அனு­ம­தி­இன்றி சிங்­கப்­பூ­ருக்­குள் வரு­வது தொடர்­பா­க­வும் வீட்­டி­லேயே இருக்க விடுக்­கப்­பட்ட உத்­த­ரவை மீறி­ய­தற்­கா­க­வும் 89 பேரின் வேலை அனு­மதிச் சீட்­டு­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன.

அந்த 89 பேரில் 73 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளுக்­குச் சென்று முறை­யான அனு­மதி பெறா­மல் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைந்­த­னர்.

16 பேர் தங்­க­ளுக்கு விடுக்­கப்­பட்ட கட்­டாய விடுப்பு அல்­லது வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவை மீறி­னர். சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய இவர்­கள் அனை­வ­ருக்­கும்

நிரந்­த­ரத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. விதிமீறிய சில முதலாளிகளின் வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் சலு­கை­ இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளது.