காவடிகள், முழக்கங்கள் இல்லாத பங்குனி உத்திரம்

மேள­தா­ளம் இல்லை, ஓம் முருகா! ஓம் முருகா! முழக்­கம் இல்லை, வண்ண வண்­ணக் காவ­டி­களில் ஊர்­வ­லம் இல்லை. எனி­னும் பக்­தர்­க­ளின் வருகை தடை­ப­ட­வில்லை.

சிங்­கப்­பூ­ரில் ஆயி­ரக்­க­ணக்­கான பக்­தர்­கள் ஆண்­டு­தோ­றும் திர­ளும் முக்­கிய இந்து திரு­வி­ழாக்­களில் ஒன்­றான பங்­குனி உத்­தி­ரம் புனித மரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோயி­லில் மிக விம­ரி­சை­யா­கக் கொண்­டா­டப்­படுவது வழக்கம்.

ஆனால் கொவிட்-19 கிரு­மிப் பர­வலை எதிர்க்­கும் முயற்­சி­களில் ஒன்­றாக இவ்­வாண்டு பங்­குனி உத்­திர காவடி/பால்­குட ஊர்­வ­லம் ரத்து செய்­யப்­பட்­டது.

அதை­ய­டுத்து ஈசூன் தொழிற்­பேட்­டை­யில் அமைந்­துள்ள புனித மரம் ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­யர் கோயில் நேற்று மூடப்­பட்­டா­லும் பக்­தர்­கள் கோயில் வாச­லி­லி­ருந்து முரு­கக் கட­வுளை வழி­பட சிறப்பு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

“பக்­தர்­க­ளுக்கு நிச்­ச­யம் ஏமாற்­ற­மா­க­த்தான் இருக்­கும். ஆனால் தற்­போது நிலவி வரும் கிரு­மித்­தொற்று சூழ்­நிலை பற்றி பெரும்­பா­லோ­ருக்­குப் புரி­கிறது. முறை­யான பாது­காப்பு இடை­வெ­ளி­கள், முகக்­க­வ­சங்­களும் கைய­ணி­களும் அணி­வது போன்ற முன்­னெச்­

ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து, பக்­தர்­க­ளின் பாது­காப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்,” என்­றார் கோயி­லின் துணைப் பொரு­ளா­ள­ரான திரு தனேந்­தி­ரன் தேவேந்­தி­ரன், 44.

அதி­காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்­தர்­கள் பால் பொட்­ட­லங்­கள் வாங்கி பால் அபி­‌ஷே­கங்­க­ளுக்கு வழங்­கி­னர். பங்­குனி உத்­திர தினத்தை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட அபி­‌‌ஷே­கங்­களும் பூசை­களும் அக்­கோ­யி­லின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பட்­டன.

ஸ்ரீ பால­சுப்­பி­ர­ம­ணி­ய­ரின் உற்­சவ மூர்த்தி சிலை, ராஜ கோபு­ரத்­தின் நுழை­வு­வா­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. பக்­தர்­கள் கோயில் வாச­லி­லி­ருந்து வழி­பட வச­தி­யான சூழலை அது ஏற்­ப­டுத்­தி­யது. ஒவ்­வோர் ஆண்­டும் வழக்­க­மாக சேவை செய்­யும் ஏறக்குறைய 160 தொண்­டூ­ழி­யர்களின் எண்­ணிக்கை இவ்­வாண்டு 20க்குக் குறைக்­கப்­பட்­டது.

அத்­து­டன் அர்ச்­ச­கர்­க­ளைத் தவிர்த்து எந்­நே­ர­மும் கோயி­லுக்­குள், அனு­மதி பெற்ற நிர்­வாக உறுப்­பி­னர்­கள் அல்­லது தொண்­டூ­ழி­யர்­களையும் சேர்த்து 10 பேர்தான் இருக்­க­ வேண்­டும் என்ற கட்­டுப்­பாடு உள்­ளது என்­றும் கோயில் நிர்­வாக உறுப்­பி­ன­ரான 65 வயது திரு எஸ்.கே.பாலா­சுப்­பிரமணி­யம் தெரி­வித்­தார். அடுத்த ஆண்டு பங்­குனி உத்­தி­ரம் சிறப்­பாக நடை­பெற வேண்­டும் எனப் பக்­தர்­கள் விருப்­பம் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!