முரசொலி: மெடிஷீல்டு லைஃப் திட்ட சீரமைப்பு காலத்தின் கட்டாயமாகிறது

சிங்கப்பூரில் மெடிஷீல்டு லைஃப் என்ற நாட­ளா­விய கட்­டாய தேசிய சுகா­தார காப்புறுதித் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­கள், மத்­திய சேம நிதி ஏற்­பாடு ஆகி­யவை இல்­லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாது. அதுபோலவே மெடி­ஷீல்டு லைஃப் திட்­ட­ம் இல்­லாத ஒரு நிலையை நினைத்துப் பார்க்க முடி­யாத சூழல் உரு­வாகி உள்ளது என்றால் அது மிகையாகாது.

மெடி­ஷீல்டு லைஃப் திட்டம் அடுத்த ஆண்­டில் குறிப்­பி­டத்­தக்க அள­வுக்­கு செம்­மை­யாகத் திருத்தி அமைக்­கப்­பட இருக்­கிறது. மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வ­தற்கு ஆகும் அதிக கட்­ட­ணங்­களைச் செலுத்­தவும் மேலும் பல நோய்­களுக்­கான சிகிச்­சை­க­ளுக்கு ஆகும் செலவை அந்தக் காப்­பு­று­தித் திட்­டத்­தைக் கொண்டு ஈடு செய்யவும் தோதாகத் திட்­டத்தைத் திருத்தி அமைப்­பது இலக்கு.

மெடி­ஷீல்டு லைஃப் திட்டத்தின் கீழ் ஆண்­டுக்கு $100,000 வரை இப்­போது பெற முடி­யும். இதை $150,000 ஆக உயர்த்­து­வது தெரி­விக்­கப்­பட்டு உள்ள யோச­னை­களில் ஒன்­று.

இப்­படி சலு­கை­கள் கூடும்போது அந்­தக் காப்புறுதித் திட்­டத்­துக்கு மக்­கள் செலுத்த வேண்­டிய பிரி­மி­யம் சந்தா தொகை­யும் கூடும் என்­பது எதிர்­பார்க்­கக்­கூ­டிய ஒன்­று­தான்.

மெடி­ஷீல்டு லைஃப் அடுத்த ஆண்டு அதிக உத­வி­களை, பலன்­க­ளைத் தரும் வகை­யில் செம்­மை­யா­கத் திருத்தி அமைக்­கப்­படும்போது அந்­தத் திட்­டத்­திற்­குச் செலுத்த வேண்­டிய சந்தா தொகை 35 விழுக்­காடு வரை உய­ர­லாம் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்டாய காப்­பு­று­தித் திட்­டம் தொடங்­கப்­பட்டு ஐந்து ஆண்­டு­க­ள் ஆகின்­றன என்­றா­லும் அடுத்த ஆண்­டில்­தான் முதன்முதலாக சந்தா தொகை உயர்த்­தப்­படும் என்று தெரி­கிறது.

மெடி­ஷீல்டு லைஃப் திட்ட மேம்­பாடு தொடர்­பில் பொது­மக்­க­ளி­டம் அப்­ப­டி­யும் இப்­ப­டி­யு­மாக கருத்து­கள் நில­வு­கின்­றன. அந்­தத் திட்­டம் அளிக்­கக்­கூடிய பரந்த, விரி­வான ஆத­ரவை சிங்­கப்­பூ­ரர்­கள் வர­வேற்­கி­றார்­கள். அதே­வே­ளை­யில், சந்தா தொகை அதி­கரிப்­பதால் மக்­க­ளுக்கு நிதிச் சுமை கூடி­விடுமே என்று சிலர் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள்.

இதை எல்­லாம் மன­தில் வைத்­து­தான், அந்­தத் திட்­டம் பற்­றிய பூர்­வாங்க பரிந்­து­ரை­கள் தொடர்­பில் பொது­மக்­க­ளி­டம் இருந்து கருத்­து­களை, யோச­னை­க­ளைப் பெற அர­சாங்­கம் விரும்­பு­கிறது.

இந்த வாய்ப்­பை பொது­மக்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். தங்­கள் கருத்­து­களை, யோசனை­களை, எண்­ணங்­களை அவர்­கள் வெளிப்­படுத்த வேண்­டும்.

அப்­படி செய்­தால்­தான் மக்­க­ளின் தேவை­களை எல்­லாம் கருத்­தில் கொண்டு இந்­தத் திட்­டத்­தைப் பொருத்­த­மா­ன­தாக, காலத்­திற்கு ஏற்­பு­டை­ய­தா­கத் திருத்தி அமைக்க முடி­யும்.

சிங்­கப்­பூர் மக்­களில் முன்­னோடி தலை­மு­றை­யினர் இருக்­கி­றார்­கள். மெர்­டேக்கா தலை­மு­றை­யி­னர் இருக்­கி­றார்­கள். இவர்­கள் எல்­லாம் ஏற்­கெனவே பல சுகா­தார மருத்­துவ மானி­யங்­க­ளைப் பெற்று வரு­கி­றார்­கள்.

இதற்­கும் மேலாக மக்­கள்­தொ­கை­யில் சுமார் பாதி பேருக்கு மெடி­ஷீல்டு லைஃப் சந்தா தொகை­யில் பாதி அளவுக்குத் தொடர்ந்து மானி­யம் கிடைக்­கும் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

மக்­கள்­தொ­கை­யில் கணி­ச­மான அள­வி­ன­ருக்கு உத­வும் வகை­யில் நிரந்­தர சந்தா தொகை தள்ளு­படி­களும் இருக்­கின்­றன.

இவை எல்­லாம் ஒரு­பு­றம் இருக்க, சந்தா உயர்வை சிங்­கப்­பூ­ரர்­கள் சமா­ளிக்க வேண்­டும் என்­ப­தற்­காக இரண்­டாண்டு காலம் அர­சாங்­கம் கொவிட்-19 மானி­யங்­க­ளை­யும் கொடுக்க இருக்­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­பு­களை எல்­லாம் கருத்­தில் கொண்டால் இவை எல்­லாம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கிடைக்­கக்­கூ­டிய மிக முக்­கிய பண உத­வி­க­ளாக இருக்­கும் என்பதில் ஐயமில்லை.

போதைப் பித்து, மதுப் பித்து, உயிர்­மாய்ப்­புச் சம்­ப­வங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய காயங்கள் அல்­லது வேண்­டு­மென்றே ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளக்கூடிய காயங்­கள் ஆகியவற்­றுக்­கும் சிகிச்சை அளிக்க பயன்­படுத்­திக்கொள்­ளும் அள­வுக்கு மெடி­ஷீல்டு லைஃப் கட்­டாய காப்­பு­று­தியில் ஏற்­பா­டு­கள் தேவை என்றும் யோசனை முன்­வைக்­கப்­பட்டு இருக்­கிறது.

இதை சீர்­தூக்­கிப் பார்க்­கை­யில் இந்த ஏற்­பாடு முக்­கி­ய­மா­ன­தா­கவே தெரி­ய­வ­ரு­கிறது.

நோயா­ளி­க­ளுக்­குத் தேவைப்­ப­டக்­கூ­டிய அத்­தி­யா­வ­சிய ஆத­ரவை அளிப்­ப­தோடு, உத­வி­களை நாடும்போது மக்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய மனச் சங்­க­டங்­க­ளை­யும் இந்த ஏற்­பாடு குறைக்கும்.

போதைக்­கும் மதுவுக்­கும் அடி­மை­யா­வது, தனக்­குத்­தானே பாத­கங்­களைக் தேடிக்­கொள்­வது போன்றவை எல்­லாம் மருத்­துவ ரீதி­யில் குணப்­படுத்த முடி­யா­தவை; அவை விரும்­பத்­த­காத சமூக நடத்­தை­கள் என்ற கருத்து நில­வு­மே­யா­னால் அத்­தகைய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­பது என்­பது சிர­ம­மா­னதாகவே இருக்­கும்.

அப்­ப­டிப்­பட்ட பாதிப்­புக்கு உள்­ளாகி இருப்­ப­வர்­களை அணுகவேண்­டிய விதம் கால­வோட்­டத்­துடன் பரி­ண­மித்து வரு­கிறது. இதைத்­தான் இப்­போது முன்­வைக்­கப்­பட்டு உள்ள யோச­னை­கள் புலப்­படுத்து­கின்­றன.

மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டம் தொடர்ந்து கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய நிலை­யில் இருந்து வர­வேண்­டும். இது­வும் யோசனை­யாக முன்­வைக்­கப்­பட்டுள்­ளது.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்கு ஆகும் செலவு தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. குறிப்­பாக சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை மூப்­ப­டைந்து வரு­வ­தைக் கருத்­தில்­கொண்டு பார்க்­கை­யில் சுகா­தா­ரப் பரா­மரிப்­புக்கு ஆகும் செலவு ஒரு மிரட்­ட­லா­கவே உரு­வெ­டுக்­கும்­போல் தெரி­கிறது.

இந்த மிரட்­டலை நாம் சமா­ளித்­து­தான் ஆக­வேண்­டும். இதில் மெடி­ஷீல்டு லைஃப் திட்­டத்­தை செம்­மை­யா­கத் திருத்தி அமைக்­கும் முயற்சி மிக முக்­கி­ய­மா­ன­தாக இருக்­கும் என்று கூறமுடியும்.

உல­கி­லேயே ஆக அதிக ஆயு­ளைக் கொண்ட சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­க­ளு­டைய சுகா­தா­ரப் பரா­மரிப்பைத் தொடர்ந்து கட்­டிக்­காக்க எடுக்­கும் முயற்­சி­க­ளுக்­குத் திருத்­தப்­பட்ட மெடி­ஷீல்டு லைஃப் ஏற்பாடும் கைகொ­டுத்து உறுதுணையாக இருக்கும் என்பதே நம்பிக்கை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!