450,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடமறியும் சாதனம்; ஏசிஇ குழுமம் வழங்குகிறது

‘அஷ்யு­ரன்ஸ், கேர் என்­கேஜ்­மெண்ட்’ (ஏசிஇ) என்ற குழு­மம் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­க­ளைச் சேர்ந்த 450,000க்கும் அதிக வெளி­நாடு மற்­றும் உள்­நாட்டு ஊழி­யர்­க­ளுக்குத் தட­ம­றி­யும் சாத­னங்­களை வழங்க இருக்­கிறது.

கட்­டு­மா­னம், கப்­பல் பட்­டறை, உணவு பத­னீட்டு தொழில்­து­றை­களில் வேலை பார்க்­கின்ற, விடுதி­களில் தங்கி இருக்­கின்ற அனைத்து ஊழி­யர்­க­ளுக்­கும் இவை கட்­டம் கட்­ட­மாக இம்­மா­தம் 18ஆம் தேதி முதல் விநி­யோ­கிக்­கப்­படும் என்று இந்­தக் குழு­மம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்து இருக்­கிறது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­கள் மற்றும் வேலைச் சூழலுக்கு ஏற்ப உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும் இச்சாத­னங்­கள் கச்­சி­த­மா­னவை. தண்­ணீர் பட்­டா­லும் கெட்­டுப்­போ­கா­தவை. இவற்றை எப்­போ­தும் அணிந்­து­கொள்ளலாம்.

வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பயன்­படுத்­தும் கைபே­சி­யில் இருக்­கும் டிரேஸ் டுகெ­தர் என்ற செய­லி­யைப் போல் இது செயல்­படும்.

இவை எந்த அள­வுக்­குப் பலன் தரு­கின்­றன என்­பதை இந்­தக் குழு­ம­மும் பல துறை­க­ளை­ச் சேர்ந்த அமைப்­பு­களும் பரி­சோ­தித்து மதிப்­பி­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. இந்­தச் சாத­னம் கொவிட்-19 கிருமி பர­வு­வ­தைத் தடுப்­ப­தில் முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் பலனளிக்­கும்.

அறி­வார்ந்த நகர் மற்­றும் மின்­னி­லக்க அர­சாங்க குழு­மம், கட்டட, கட்­டு­மான ஆணை­யம், பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் ஆகி­ய­வற்­றோ­டும் சிங்­கப்­பூர் ஒப்­பந்­தக்­கா­ரர்­கள் சங்­கம் போன்ற அமைப்­பு­களோ­டும் சேர்ந்து இந்­தச் சாத­னங்­களை ஏசிஇ குழு­மம் விநி­யோ­கிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

இந்­தப் பணி அடுத்த மாத தொடக்­கத்­தில் முடி­வ­டை­யும். தட­மறி­யும் சாத­ன விநியோகம் பற்றி முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்­றும் குழு­மம் அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!