‘லஸாடா’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘ரெட்மார்ட்’டில் தகவல் அத்துமீறல் 1.1 மில்லியன் கணக்குகளின் தனிப்பட்ட தகவல்கள் களவு

இணை­யம்­வழி மளி­கைப் பொருட்­களை விற்­பனை செய்­யும் ‘ரெட்­மார்ட்’ நிறு­வ­னத்­தின் 1.1 மில்­லி­யன் பய­னா­ளர் கணக்­கு­க­ளின் தனிப்­பட்ட விவ­ரங்­கள், வாடிக்­கை­யா­ளர் தக­வல் தளத்­தி­லி­ருந்து கள­வா­டப்­பட்டு இணை­யத்­த­ளம் ஒன்­றில் விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளன.

‘ரெட்­மார்ட்’டின் உரி­மை­யா­ள­ரான இணைய வணிக நிறு­வ­ன­மான ‘லஸாடா’, பய­னா­ளர் விவ­ரங்­கள் திரு­டப்­பட்­டதை நேற்று முன்­தி­னம் உறு­திப்­ப­டுத்­தி­யது. பய­னா­ளர்­க­ளின் பெயர்­கள், தொலை­பேசி எண்­கள், மின்­னஞ்­சல் மற்­றும் அஞ்­சல் முக­வ­ரி­கள், மறைச்­சொற்­கள், கடன் அட்டை எண்­க­ளின் ஒரு பகுதி உள்­ளிட்­டவை கள­வா­டப்­பட்ட விவ­ரங்­களில் அடங்­கும்.

பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இது­கு­றித்து லஸாடா தெரி­யப்­ப­டுத்தி வரு­கிறது.

“ரெட்­மார்ட் கட்­ட­மைப்­பி­லி­ருந்து எடுக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர் தக­வல் தளத்­தைத் தன்­கை­வ­சப்­ப­டுத்­தி­விட்­ட­தாக கூறும் தனி­ந­பர் ஒரு­வரை எங்­க­ளது இணை­யப் பாது­காப்­புக் குழு கண்­ட­றிந்­தது. அந்த ரெட்­மார்ட் கட்­ட­மைப்பு பயன்­பாட்­டில் இல்லை,” என்று லஸா­டா­வின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் மின்­னஞ்­சல் மூல­மா­க­வும் தனது இணை­யப் பக்­கத்­தி­லும் இது­கு­றித்து லஸாடா தெரி­யப்­ப­டுத்­தி­யது. முன்­னெச்­ச­ரிக்கை கண்­கா­ணிப்­புப் பணி­யின் ஒரு பகு­தி­யாக இந்­தத் தக­வல் திருட்டு கடந்த வியா­ழக்­கி­ழமை கண்­டு­பிடிக்­கப்­பட்­ட­தாக கூறிய அந்­நி­று­வ­னம், தற்­போ­தைய வாடிக்­கை­யாளர்­க­ளின் விவ­ரங்­கள் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று வலி­யு­றுத்­தி­யது.

அதி­கா­ர­மற்ற முறை­யில் தக­வல் தளத்தை எவ­ரும் நாடு­வ­தற்­குத் தடை விதிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்ள அந்­நி­று­வ­னம், தக­வல் கள­வா­டப்­பட்­டி­ருப்­பது குறித்து தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு ஆணை­யத்­தி­டம் தான் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­க­வும் கூறி­யது. இச்­சம்­ப­வம் தனது கவ­னத்­திற்கு வந்­துள்­ள­தா­க­வும் இது­கு­றித்து தான் விசா­ரணை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் ஆணை­யம் தெரி­வித்­தது.

பாது­காப்பு நட­வ­டிக்­கை­யாக, பாதிக்­கப்­பட்ட வாடிக்­கை­யா­ளர்­களை அவர்­க­ளது பய­னா­ளர் கணக்­கு­களில் இருந்து லஸாடா வெளி­யேற்­றி­யுள்­ளது.

இந்த வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது கணக்­கு­களுக்கு உள்­நு­ழை­யும்­போது புதிய மறைச்­சொல்லை உரு­வாக்க கேட்­டுக்­கொள்­ளப்­படும். மறைச்­சொற்­களை அடிக்­கடி மாற்­றிக்­கொள்­ளு­மா­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

மோசடி மின்­னஞ்­சல்­க­ளுக்கு எதி­ராக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு வாடிக்­கை­யா­ளர்­களை லஸாடா எச்­ச­ரித்­துள்­ளது.

“உங்­க­ளது தனிப்­பட்ட விவ­ரங்­க­ளைச் சரி­பார்க்க வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் லஸாடா கோராது,” என்று அந்­நி­று­வ­னம் குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!