3 மாதங்களில் 20 சட்டவிரோத ‘ட்ரோன்’ ஊடுருவல்கள்

சாங்கி விமான நிலைய ஆகா­யப் பகு­திக்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக ‘ட்ரோன்’ எனப்­படும் ஆளில்லா வானூர்­தி­யைச் செலுத்­திய 20 சம்­ப­வங்­கள் கடந்த மூன்று மாதங்­களில் நிகழ்ந்­துள்­ளன என்­றும் அந்­தக் குற்­றங்­க­ளைப் புரிந்­தோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்­தி­லி­ருந்து விமான சேவை­களுக்கு எவ்­வித பாதிப்­பும் ஏற்­ப­ட­வில்லை என்று கூறி­னார் மூத்த அமைச்­சர் டியோ சீ ஹியன்.

சாங்கி விமான நிலை­யத்­துக்கு நேற்று வரு­கை­ய­ளித்த திரு டியோ, கடந்த ஆண்டு நிகழ்ந்த சில சம்­ப­வங்­க­ளுக்­குப் பிறகு, ட்ரோ­னுக்கு எதி­ராக எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் குறிப்­பி­டத்­தக்க வெற்­றியை அளித்­தி­ருப்­ப­தாக விவ­ரித்­தார்.

“ட்ரோனை செய­லி­ழக்­கச் செய்­யும் ஆற்­றல் கொண்ட சாத­னத்தை நாங்­கள் உரு­வாக்­கி­யுள்­ளோம். ஆனால், இந்­தப் பகுதி சவால்­மிக்­கது என்­ப­தால் ட்ரோன் தொழில்­நுட்­பத்தை அவ்­வப்­போது மேம்­படுத்­திக்­கொண்­டி­ருக்க வேண்­டும்.

“இதில் குறிப்­பி­டத்­தக்க வெற்­றியை நாம் அடைந்­துள்­ளோம். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சாங்கி விமான நிலைய விமா­னச் சேவை­க­ளுக்­குப் பாதிப்பு எற்­ப­டுத்­தும் வகை­யில் எவ்­வித ஊடு­ருவல் சம்­ப­வமும் நிக­ழவில்லை. இருப்­பி­னும், ட்ரோன் எதிர்ப்பு தொழில்­நுட்ப ஆற்­றல்­கள் மேம்­படுத்­தப்­பட வேண்­டும்,” என்­றார் திரு டியோ.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில், சட்­ட­வி­ரோத ட்ரோன் ஊடு­ருவலால் இரண்டு முறை விமா­னச் சேவைக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டது. அதன் பிறகு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட ட்ரோ­னுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­கள் பற்றி மூத்த அமைச்­ச­ருக்கு நேற்று விளக்­கம் அளிக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு ஜூன் 18, 19ஆம் தேதி­களில் நடந்த முத­லா­வது சம்­ப­வத்­தில் சட்­ட­வி­ரோத ட்ரோன் ஊடு­ருவலால் 30 விமா­னச் சேவை­கள் பாதிக்­கப்­பட்­டன.

ஜூன் 24 நடந்த இரண்­டா­வது சம்­ப­வத்­தில், சட்­ட­வி­ரோத ட்ரோன் ஊடு­ருவலாலும் மோச­மான பரு­வ­நி­லை­யா­லும் 15 விமா­னப் புறப்­பாடு களும் வரு­கை­களும் தாம­திக்­கப்­பட்­டன. ஏழு விமான சேவை­கள் வேறு இடங்­க­ளுக்கு மாற்றி விடப்­பட்­டன.

சாங்கி விமான நிலை­யத்­தின் ஓடு­பா­தைக்கு அரு­கில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ரோன்­க­ளைக் கண்­ட­றி­யும் ரேடார் சாத­னத்தை திரு டியோ நேற்று நேரில் பார்­வை­யிட்­டார்.

“ட்ரோன் ஊடு­ரு­வல் என்­பது வளர்ந்து வரும் ஒரு பிரச்­சினை. அதற்­குத் தீர்வு காண்­பது சிர­ம­மா­னது. சிங்­கப்­பூர் உட்­பட உல­கின் பல விமான நிலை­யங்­கள் அவற்றை எதிர்­கொள்ள பல்­வேறு உத்­தி­க­ளைக் கையாண்டு வரு­கின்­றன.

சட்­ட­வி­ரோ­த­மாக ட்ரோனை பயன்­ப­டுத்­து­ப­வர்­களைக் கையாள சிறந்த ஒருங்­கி­ணைக்கப்­பட்ட, பல அமைப்­பு­கள் பங்­கேற்­கக்­கூ­டிய அணு­கு­முறை தேவை,” என்­றும் வலி­யு­றுத்­தி­னார் திரு டியோ.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!