சாங்கி விமான நிலையத்தை அலங்கரிக்கும் மயில்கள்

தீபாவளி கொண்டாட்­டம் லிட்டில் இந்­தி­யா­வில் மட்­டு­மல்­லா­மல் சிங்க­ப்­பூ­ரின் சாங்கி விமான நிலை­யத்­தி­லும் களை­கட்­டி­யுள்­ளது. இப்­பண்­டிகையைக் கொண்டா­டும் விதத்­தில் சாங்கி விமான நிலை­யத்­தில் இலை, மலர்­க­ளால் அலங்க­ரிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய அளவிலான மயில்­கள் காட்­சி ­படுத்­தப்­பட்­டுள்­ளன. சாங்கி விமான நிலை­யத்­தின் மூன்று முனை­யங்களை­யும் மொத் தம் 14 மயில்­கள் அலங்க­ரிக்­ கின்றன. இதில் பெரிய அள­வி­லான மயில் 4 முதல் 4.5 அடி கொண்ட­தாக அலங்க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்வோர் மயிலும் தனித்­து­வ­மா­க அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆர்க்­கிட், ப்ரோ­மி­லி­யட்ஸ் போன்ற வெவ்வேறு வகையான பூக்­களைக் கொண்டு மட்டுமல்லாமல் மயில் தோகை­களைக் கொண்டும் அழ­குப்­படுத்­தப்­பட்­டுள்ளன. கண்கவர் வண்ணங்களைக் கொண்ட இந்த மயில்­கள் விமான நிலை­ய பார்வையாளர்களிடையே யும் விமானப் பயணிகளிடையே யும் பெரும் வர­வேற்ப்பைப் பெற்­று உள்­ளது. தீபாவளி பண்­டிகையை மைய­மா­கக் கொண்டு விமான நிலை­யத்தை அலங்க­ரிக்­கும் இந்த மயில்­களை நவம்பர் மாதம் 7ஆம் தேதி வரை பார்வை­யா­ளர்­கள் கண்­டு­களிக்­க­லாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

இளம் சாதனையாளர் விருது பெற்ற ஹரிணி.வி, வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற க.து.மு. இக்பால், நா.ஆண்டியப்பன் ஆகியோர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

17 Nov 2019

தமிழ் வளர்ப்போருக்கு விருதும் பாராட்டும்

கோப்புப்படம்: இணையம்

17 Nov 2019

பகலில் போடும் குட்டித் தூக்கம்