ஆசிய பசிபிக்கின் முதல் ‘ஹலால்’ சொகுசுக் கப்பல்

ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தி­லேயே முதன்­மு­றை­யாக ‘ஹலால்’ வழி­மு­றை­யைப் பின்­பற்­று­ப­வர்­க­ளுக்­கென சிறப்பு வச­தி­க­ளு­ட­னான சொகு­சுக் கப்­பல் நேற்று முன்­தி­னம் அறி­மு­கம் கண்­டது.

டிரீம் குரூ­சஸ் நிறு­வ­னம் இயக்­கும் ‘வோர்ல்ட் டிரீம்’ எனும் சொகு­சுக் கப்­பல் அந்­தப் பெரு­மை­யைப் பெற்­றுள்­ளது.

ஐக்­கிய உலக ஹலால் மேம்­பாட்டு நிறு­வ­னத்­தின் ‘ஹலால்’ சான்­றி­த­ழை­யும் உல­க­ளா­விய சைவ அங்­கீ­கார சேவை­க­ளின் சைவ சான்­றி­த­ழை­யும் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் பெற்­றுள்ள முதல் சொகு­சுக் கப்­ப­லாக ‘வோர்ல்ட் டிரீம்’ விளங்­கி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் முதன்­மு­றை­யாக கடந்த நவம்­பர் மாதம் 6ஆம் தேதி முதல் இந்­தச் சொகு­சுக் கப்­பல் சிங்­கப்­பூ­ரைத் தள­மா­கக் கொண்டு இரண்டு அல்­லது மூன்று இரவு மகிழ் உலா பய­ணங்­களை மேற்­கொண்டு வரு­கிறது.

“ஆசி­யா­வில் பெயர்­பெற்ற நிறு­வ­ன­மான டிரீம் குரூ­சஸ், முழு­மை­யாக ‘ஹலால்’ முறைக்கு ஏது­வான சொகு­சுக் கப்­பல் அனு­ப­வத்தை வரு­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தில் மிகுந்த பெரு­மைக்­கொள்­கி­றோம். இந்த அங்­கீ­கா­ரம் உண­வுக்கு மட்­டு­மில்­லா­மல் கப்­ப­லில் ஒட்­டு­மொத்­த­மாக மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்ள ‘ஹலால்’ வாழ்க்­கை­மு­றை­யைப் பிர­தி­ப­லிக்­கிறது,” என்று கூறி­னார் டிரீம் குரூ­சஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு மைக்கல் கோ.

தனிப்­பட்ட ஹலால் மைய சம­ய­லறை, சிறப்­பாக ஒதுக்­கப்­பட்ட ஹலால் உண­வ­கம், புனித ரம­லான் மாதத்­தில் நோன்பு நோற்க சிறப்­பான ‘சஹர்’ சாப்­பாடு, நோன்பு துறக்க உணவு ஏற்­பாடு, புனித குர்­ஆன், ‘முசல்­லாஹ்’ எனும் விரிப்பு, திசைகாட்டி போன்ற அம்­சங்­க­ளு­ட­னான தொழுகை அறை, பெண்­க­ளுக்­கென தனியே ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள மருத்­துவ சேவை­கள், ஸ்பா உடல் சேவை­கள், நீச்­சல் குளம் என ‘ஹலால்’ முறை­யில் விடு­மு­றை­யைக் கழிக்­க­வேண்­டி­ய­தற்­கான ஏற்­பா­டு­கள் கப்­ப­லில் உண்டு.

“இந்த ஏற்­பா­டு­க­ளால் மக்­கள் நம்­பிக்­கை­யு­டன் இந்­தக் கப்­ப­லில் பய­ணம் செய்­ய­லாம். சைவ உண­வும் சுத்­த­மான முறை­யில் தயா­ரிக்­கப்­ப­டு­கிறது. இந்த அங்­கீ­கா­ரத்­தைப் பெறு­வ­தற்­குக் கப்­பல் நிர்­வா­கம் பல அம்­சங்­களில் கவ­னம் செலுத்தி முறை­யாக மாற்­றங்­களை மேற்­கொண்­டது. உணவு வாங்­கு­மி­டம் முதற்­கொண்டு அனைத்து பிரி­வு­கள், முறை­கள், செயல்­மு­றை­களும் ஆய்வு செய்­யப்­பட்ட பின்­னரே சான்­றி­தழ் வழங்­கப்­பட்­டுள்­ளது,” என்று கூறி­னார் ஐக்­கிய உலக ஹலால் மேம்­பாட்டு நிறு­வ­னத்­தின் தலை­வர் திரு முஹம்­மது ஜின்னா.

“ஹலால் முறை­யைப் பின்­பற்­று­ப­வர்­க­ளுக்­குத் தகுந்த சொகு­சுக் கப்­பல் ஆசிய கடற்­ப­கு­தி­யில் செயல்­ப­ட­வேண்­டும் என்­பது ஐக்­கிய உலக ஹலால் மேம்­பாட்டு நிறு­வ­னத்­தின் நீண்ட கால நோக்­கம். டிரீம் குரூ­சஸ் கப்­பல் படை­யின் வோர்ல்ட் டிரீம் சொகு­சுக் கப்­பலை அங்­கீ­க­ரிக்க ஜென்­டிங் குரூஸ் லைன்ஸ் நிறு­வ­னத்­து­டன் புதிய பங்­கா­ளித்­து­வத்­தில் இணைந்­த­தில் மகிழ்ச்சி கொள்­கி­றோம்,” என்­றார் திரு ஜின்னா.

சுகா­தா­ர­மான, சுத்­த­மான சைவ உணவை விரும்­பு­ப­வர்­க­ளுக்கு தாவ­ரங்­கள் அடிப்­ப­டை­யி­லான உணவு வகை­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று சூழ­லில் வெளி­நாட்­டுப் பய­ணங்­களை மேற்­கொள்ள முடி­யாத சூழ்­நி­லை­யால் சொகு­சுக் கப்­பல்­கள் மகிழ் உலா பய­ணங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அத­னால் சிங்­கப்­பூ­ரர்­கள் தங்­கள் விடு­மு­றையை இது­போன்ற பய­ணங்­களில் கழிக்க இந்த ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. அனைத்து பய­ணி­க­ளுக்­கும் ‘மைஸ்பாட்’ எனும் கருவி வழங்­கப்­ப­டு­கிறது. அத­னு­டன் பல பாது­காப்­பான நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் செயல்­பாட்­டில் உள்­ளன. பாது­காப்­பாக மக்­கள் நம்­பிக்­கை­யு­டன் பய­ணங்­களை மேற்­கொள்ள இந்த ஏற்­பா­டு­கள் வழி­செய்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!